விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 தமிழ், நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது.
Image Credit : vijay television, Maruthi Suzuki
Also Read | தளபதி 67 படத்தில் பகத் பாசில்?.. LCU-வா?.. செம பதில் அளித்த பகத்!
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, ஈழத்தை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம் மற்றும் ஜனனி, தனலெட்சுமி, மணிகண்ட ராஜேஷ், ரச்சிதா, ஏடிகே ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
சிறந்த போட்டியாளராக வலம் வந்த கதிரவன், பண மூட்டையை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார். மைனா நந்தினியும் இறுதி போட்டிக்கு முன்னதாக எலிமினேட் ஆனார்.
இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அசிம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட 3 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர்.
நேற்று நடந்த இறுதி போட்டியில் முதல் நபராக ஷிவின் எலிமினேட் ஆனார். பின்னர் விக்ரமன் & அசீம் இடையே ஒருவர் பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அசீம் இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் கமல்ஹாசனால் அசீம் அறிவிக்கப்பட்டார்.
வெற்றியாளர் அசீம்க்கு பரிசாக மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் Brezza மாடலின் முதல் கார் பரிசாக அளிக்கப்பட்டது. SUV ரக காரான இது 8 லட்ச ரூபாய் முதல் 14 லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது. 5 நபர்கள் அமர்ந்து பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த கார் 1462 சிசி இன்ஜின் கொள்ளளவு கொண்டது. பெட்ரோல் எரிபொருள் கொண்ட இந்த கார் மணிக்கு 20 கிலோமீட்டர் மைலேஜ் தரவல்லது. 11 வகைகளில் இந்த கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
Also Read | வெளியேறும் முன்பு, விக்ரமனுக்காக அம்பேத்கரின் பொன்மொழியை பேசி Bigg Boss நெகிழ்ச்சி..!