தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம் மற்றும் ஜனனி, தனலெட்சுமி ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் மணிகண்ட ராஜேஷ் வெளியேறினார்.
தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன், ஷிவின், ஏடிகே, கதிரவன், ரச்சிதா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். 90 நாட்களை கடந்துள்ள நிலையில் இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர். இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய 92-வது எபிசோடில் கமல்ஹாசன், இந்தவாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர் யார் என்பதை அறிவித்தார்.
மைனா நந்தினி & ரச்சிதா இருவரில் யார் எலிமினேட் ஆவார்கள் என பரபரப்பு நிலவியது. யார் எலிமினேட் என்பதை கவரை திறந்து கமல் காட்ட முற்படும் போது, கவரை திறந்து அதில் எதுவுமில்லை என்று காட்டினார். உடனே போட்டியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அப்போது ட்விஸ்ட் கொடுத்த கமல், போட்டியாளர்கள் முன் வைக்கப்பட்ட வைர பெட்டியை மைனா நந்தினி & ரச்சிதா இருவரையும் திறக்க வைத்தார். மைனா நந்தினி & ரச்சிதா இருவரும் பெட்டியை திறந்தனர். அந்த பெட்டியில் ரச்சிதா பெயர் இருந்ததால் ரச்சிதா இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆனார்.