VIDEO: தனது வாழ்வின் சோகத்தை பகிர்ந்த ஜனனி.. முதல் ஆளாக தடுக்க வந்த விக்ரமன்! 2வது 3வது ஆள் இவங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் ஆறாவது சீசனில் கதை சொல்வது தொடர்பான புதிய ப்ரோமோ, வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இங்கிலாந்து நாட்டின் உலகப்புகழ் பெற்ற நகரில் பிரியங்கா மோகன்.. வீதி உலா வரும் வைரல் PHOTOS!

தமிழில் ஆரம்பமான பிக்பாஸ் 6 வது சீசன், அடுத்தடுத்து பல சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களால் சென்று கொண்டிருக்கிறது.

9வது நாளை எட்டியுள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ட்விஸ்ட், பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டே இருப்பதால், போட்டியாளர்களும் இதனை விறுவிறுப்புடன் கண்டு களித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதன் காரணமாக, பிக்பாஸ் குறித்த கருத்துக்கள் கூட எப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனுக்கான டாஸ்க்கில் சாந்தி, ஜி.பி. முத்து மற்றும் ஜனனி ஆகியோர் களமிறங்கினர்.  இறுதியில் ஜி.பி. முத்து வெற்றி பெற்று கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

9வது நாளான இன்று புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களின் வாழ்வில் நடந்த சம்பவத்தை கதையாக சொல்ல வேண்டும். அவர்கள் கதை சொல்லும் போது, சக போட்டியாளர்கள்  அருகில் இருக்கும் பஜ்ஜரை அழுத்த முடியும்.

இந்நிலையில் இந்த போட்டியில் ஜனனி கதை சொல்ல தொடங்கி 10 வது வினாடியில் விக்ரமன் முதல் ஆளாக  பஜ்ஜரை அழுத்த வருகிறார். இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆளாக முறையே ஆயிஷா & தனலெட்சுமி பஜ்ஜரை  அழுத்த வருகின்றனர்.

முதல் ஆளாக ஆயிஷா, இரண்டாவது ஆளாக தனலெட்சுமி, மூன்றாவது ஆளாக விக்ரமன் பஜ்ஜரை அழுத்தி உள்ளனர். இதனால் வெளியேறும் ஜனனி அழுவது போல் ப்ரோமோ வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

Also Read | விஜய் சேதுபதி & விஷ்ணு விஷால் நடிக்கும் "இடம் பொருள் ஏவல்".. ரிலீஸ் எப்போ? செம அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Season 6 Tamil Day 9 Janany Story Telling Glimpse

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, BIGGBOSS Season 6 Tamil, Janany, Vijay Television will find this news story useful.