தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
![BIGGBOSS Season 6 Tamil Day 52 Episode Video Vijay TV BIGGBOSS Season 6 Tamil Day 52 Episode Video Vijay TV](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/biggboss-season-6-tamil-day-52-episode-video-vijay-tv-new-home-mob-index.jpeg)
Also Read | Bharathi Kannamma : "ஒரு DNA டெஸ்ட் எடுக்க 10 வருஷமா?".. RESULT -க்கு முன் பாரதியை கழுவி ஊற்றிய டாக்டர்.!
இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்தும் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.
அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது
பொம்மை டாஸ்க், அரசவை, அருங்காட்சியகம் டாஸ்க், கோர்ட் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி இருந்தது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வாரம், பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் எனும் டாஸ்க் போட்டியாளர்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்க்கில் அசீம் மற்றும் அமுதவாணன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. "ஏன் இவ்வளவு அசிங்கமா, சீப்பா கேம் ஆடுறீங்க?" என அசீம் கேட்கிறார். "கேவலம், சீப்னுலாம் நீ பேசக்கூடாது. யாராவது பேசுவாங்களா? கேவலம், சீப்புனு.. இது கேம் இது.. யார் உனக்கு ரைட்ஸ் கொடுத்தா இப்படி பேச" என அமுதவாணன் அசீமை நோக்கி பேசுகிறார். விக்ரமனும், "நீங்க ரவுடித்தனம் பண்ணிட்டு இருக்கீங்க" என அசீமை நோக்கி பேசுகிறார். பின்னர் அமுதவாணன், "கண்ணாடி முன்னாடி நின்னா நான் எட்டி உதைத்து போவேன்னா ரவுடியா நீ?" ஆவேசமாக அசீமை நோக்கி அமுதவாணன் பேசுவது போல இன்றைய ப்ரோமோ வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
Also Read | கோபியின் சூழ்ச்சிக்கு ஆளான இனியா.. பாக்கியலட்சுமி சீரியலில் நடந்தேறும் அடுத்த பரபரப்பு!