அசீம்க்கு ரொம்ப தைரியம்.. நீதிபதி மேலேயே புகார் சொல்றாரு! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | திருமணத்திற்கு முன் கௌதம் & மஞ்சிமா போட்டோ ஷூட்.. வைரலாகும் புகைப்படங்கள்!

இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்தும் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது

பொம்மை டாஸ்க், அரசவை, அருங்காட்சியகம் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி இருந்தது.

அப்படி ஒரு சூழலில், இந்த வாராம் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. அனைத்து போட்டியாளர்களும் தங்களது குற்றங்களை வழக்காக முன் வைக்க, அதனை நீதிமன்றம் மூலம் வாதாடி, அந்த வழக்கில் தீர்ப்பை எட்ட வேண்டும்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள்  பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோவில் பாத்திரம் கழுவாமல் அங்காங்கே கிடப்பதாக கதிரவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது. அதில் கூண்டில் ஏறும் அசீம், "இந்த டியூட்டி செல்ஃப் டியூட்டி தான.. நான் பர்சனலா இந்த டீம்ல பாத்தது, குயின்சியை பாத்தேன். அவங்க தட்டை கழுவாமல் வந்துட்டாங்க" என கூறினார். குயின்சி நீதிபதியாக இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். நீதிபதி மீதே அசீம் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தற்போது இந்த பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

Also Read | மாநாடு ரிலீசாகி ஒரு வருடம்.. தயாரிப்பாளர் வெளியிட்ட நெகிழ்ச்சியான அறிக்கை!

தொடர்புடைய இணைப்புகள்

BIGGBOSS Season 6 Tamil Day 47 Episode Glimpse

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Queency, Vijay Television, Vijay tv will find this news story useful.