பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல VJ நடிகை? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல VJ  நடிகை பங்கேற்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertising
>
Advertising

Also Read | பொன்னியின் செல்வன் பாத்துட்டு வந்தியத்தேவனுக்கு போன் பண்ண ரஜினி.. நெகிழ்ந்து போன கார்த்தி!

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுதும் தமிழில் ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடைபெறும். கடந்த இரண்டு சீசன் மட்டும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை நடைபெற்றது. 

சமீபத்தில் முடிந்த ஐந்தாவது சீசனும் கடந்த 4வது சீசனை போல் கடந்த அக்டோபர் மாதம் தான் தொடங்கியது. இந்நிலையில் 6வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முன்னோட்ட வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

பிக்பாஸ் சீசன் 6 தமிழ், வரும் அக்டோபர் 9 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும்  என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள்  போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சுமார் 100 நாட்கள் வரை இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏராளமான போட்டிகள்  வழங்கப்படும்.

இப்படி அனைத்து சவால்களையும் கடந்து, கடைசி வரை இருக்கும் நபர்களில் ஒருவர், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முன்னதாக, அந்த வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜூ ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர்.

இந்நிலையில் இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல VJ &  சீரியல் நடிகை மகேஸ்வரி கலந்து கொள்ள இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மகேஸ்வரி சமீபத்தில் 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக நடித்திருந்தார். ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்காக தாயுமானவன், புதுக்கவிதை ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மகேஸ்வரி, இசையருவி, சன் டிவி, சன் மியூசிக் ஆகிய சேனல்களில் தொகுப்பாளினியாக ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர் ஆவார்.

பொதுவாக, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் தான் பெரும்பாலும் கலந்து கொள்வார்கள். முதல் முறையாக பொது மக்களும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Also Read | போடு சரவெடிய.. கார்த்தி நடிக்கும்"சர்தார்".. வெளியான அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி!

தொடர்புடைய இணைப்புகள்

BIGGBOSS Season 6 Tamil Contestant VJ Maheshwari Sources

People looking for online information on Bigg Boss season 6 Tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Kamal Haasan, Vijay Television, VJ Maheshwari will find this news story useful.