BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஆரம்பமாகி உள்ள நிலையில், இதில் உள்ள முழு போட்டியாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
அந்த வகையில், முதல் போட்டியாளராக டிக் டாக் மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன் உள்ளிட்டோர் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.
அதே போல, டான்ஸ் மாஸ்டரான ராபர்ட் மாஸ்டர், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் மற்றும் மாடலான ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), பிரபல தொகுப்பாளினி ஜனனி, விஜய் டிவி பிரபலம் அமுதவாணன். VJ மற்றும் நடிகை மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மேலும், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ரச்சிதா, நடிகர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் நடிகையான குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள், பிக்பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
இவர்கள் அனைவரும் மக்கள் மத்தியலும் அதிகம் பிரபலமாக இருப்பதால், தற்போதிருந்தே தங்களின் விருப்பமான போட்டியாளர்களுக்கு ஆதரவினை அளிக்க ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.