BIGG BOSS 6 TAMIL: "ஆட்சியை கையில எடுத்துட்ட நீ".. "தலைவர் பதவியே வேணாம்".. அலறிய G.P. முத்து..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சில நாட்களுக்கு முன் தமிழில் ஆரம்பமான பிக்பாஸ் 6 வது சீசன், அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான சம்பவங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

BiggBoss Season 6 Tamil Captain Gp Muthu Funny Times
Advertising
>
Advertising

Also Read | PAN INDIA லெவலில் சமந்தா நடிக்கும் 'யசோதா'.. பட ரிலீஸ் எப்போ? தாறுமாறான அப்டேட்

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

BiggBoss Season 6 Tamil Captain Gp Muthu Funny Times

பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ரசிகர்களை கவரும் சம்பவம் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டே இருப்பதால், போட்டியாளர்களும் இதனை விறுவிறுப்புடன் ரசித்து வருகின்றனர். 

பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனுக்கான டாஸ்க்கில் சாந்தி, ஜி.பி. முத்து மற்றும் ஜனனி ஆகியோர் களமிறங்கினர். கைப்பிடிகள் கொண்ட கடிகாரம் ஒன்று வைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி வரை எந்த போட்டியாளர் கீழே விழாமலோ அல்லது இறங்காமலோ அதனை பிடித்தபடி இருக்கிறாரோ அவரே பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன் என்றும் அறிவிக்கப்பட்டது. முதல் ஆளாக சாந்தி கீழே இறங்க, ஜி.பி. முத்து மற்றும் ஜனனி ஆகியோர், தாக்குப்பிடித்தனர். இறுதியில் ஜி.பி. முத்து வெற்றி பெற்று கேப்டனாக செயல்பட உள்ளார்.

இதன்மூலம் பிக்பாஸ் ஆறாவது சீசனின் முதல் கேப்டன் யார் என்பதற்கு பதில் கிடைத்துள்ளது. மேலும் கேப்டனாக மாறிய பிறகு ஜி.பி. முத்துவை போட்டியாளர்கள் தலைவர், தலைவரே என அழைத்து பாடாய் படுத்தி எடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மேலும் அமுதவாணன் ஒருபடி மேலே சென்று "கேப்டன் ஆன பிறகு மீன், கறி வாங்கி தரேன்னு சொன்னேல." என ஜி.பி. முத்துவை பார்த்து கூற பதிலுக்கு ஜி.பி. முத்து, "கேப்டனாகி ஒரு நிமிடம் தான ஆச்சு" என கூற "ஆட்சியை கையில எடுத்துட்ட நீ" என அமுதவாணன் கலாய்ப்பது போல வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் போட்டியாளர்கள் ஜி.பி.முத்துவை கலாய்க்கும் வகையில் ஜாலியாக செயல்பட "தலைவர் (கேப்டன்) பதவியே வேணாம்" என ஜி.பி முத்து ஜாலியாக கூறுகிறார்.

Also Read | அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா-2.. படத்தில் இணைந்த பிரபல முன்னணி தமிழ் சினிமா TECHNICIAN!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Season 6 Tamil Captain Gp Muthu Funny Times

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, BIGGBOSS Season 6 Tamil, GP MUTHU will find this news story useful.