பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகர் சஞ்சீவ் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார்.

திரைப்படம், சீரியல், சின்னத்திரைகளில் நிகழ்ச்சித் தொகுப்பு என பல பரிமாணங்களைக் கொண்ட சஞ்சீவ், நடிகர் விஜய்யின் நண்பர் ஆவார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன் கதையை கூறினார். பிக்பாஸ் வீட்டில் 78வது நாள் போட்டியாளர்கள் அனைவரும் சஞ்சீவ் மற்றும் அமீரின் கதைகளை கேட்டனர். ஏறக்குறைய அனைத்து போட்டியாளர்களுமே தங்கள் கதைகளை ஏற்கனவே கூறிவிட்டனர்.
இந்நிலையில் தன் கதையை சொன்ன சஞ்சீவ், அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசும்போது, நடிகர் விஜய் குறித்தும், அவருடனான கல்லூரிப் படிப்பு, நட்பு உள்ளிட்டவை குறித்தும் பேசினார். அப்போது, “நடிகர்கள் மஞ்சுளா மற்றும் விஜயகுமார் உள்ளிட்டோர் எங்களுக்கு சொந்தக்காரர்கள். அவர்கள் அவ்வப்போது ஷூட்டிங் குறித்துப் பேசுவார்கள், வீட்டுக்கு எல்லாம் வருவார்கள். அவர்கள் சினிமா பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, எனக்கு நடிக்க வேண்டும் என்று தோன்றியது.
சிறுவயதிலிருந்தே நான் நடிப்பது, ஆடுவது, பாடுவது என்று இருந்ததால் அனைவரும் நான் நன்றாக நடிப்பதாகவும், பிற்காலத்தில் பெரிய நடிகனாக வருவேன் என்றும் சொன்னார்கள். அது மனதில் பதிந்து, பின்னர் கல்லூரி படிப்பை முடிக்கும் முன்னே நடிக்க தொடங்கினேன்.
எனினும் நல்ல நட்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 30 வருடம் அந்த கல்லூரியில் இருந்து விஜயுடன் நல்ல நட்பு இருக்கிறது என்றால் அதற்கு அந்த கல்லூரி கொடுத்த அந்த 6 மாதம் , 1 வருடம் தான் காரணம். விஜய் நடித்த நிலாவே வா திரைப்படத்தில் விஜய்யின் நண்பராக நடித்தேன்.” என்று கூறினார்.