விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலமாக நம்மிடையே பிரபலமானவர் நடிகை சனம் செட்டி. நடிகை, மாடலிங் என பல்வேறு முகங்களைக் கொண்ட சனம் செட்டி, ‘அம்புலி’, ‘மாயை’, ‘எதிர் வினையாற்று’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையே இவருக்கு தொடர்ந்து இன்ஸ்டாகிராமில், நபர் ஒருவர் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் தற்போது சைபர் க்ரைம் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணையில் அவர் ஒரு கல்லூரி மாணவர் என்பதும், அவர் திருச்சியைச் சேர்ந்த ராய் ஜான்பால் என்பதும் தெரியவந்தது.
இது பற்றி சமூக வலைத்தளத்தில் பேசியிருக்கும் சனம் செட்டி, பல்வேறு விஷயங்களை உருக்கமாக பகிர்ந்திருக்கிறார். அதில், “நான் பேசும் இந்த விஷயங்களால் ஒருவருக்காவது துணிச்சல் வந்தால், இந்த வீடியோவை மதிப்பு மிக்கதாக கருதுகிறேன்.
இன்றைய சூழலில் சைபர் குற்றம் என்பது மிகப்பெரிய ஒன்றாக இருக்கிறது. இதை சரியாக கையாளவும் எனக்கு தெரியவில்லை. என் தனிப்பட்ட வாழ்க்கை முறையில் நான் சந்தித்த இந்த அநியாயம் குறித்து, பலமுறை யோசித்து, கடைசியாக இதுபற்றி மீடியா முன்பு தெரிவித்து, கமிஷனர் அலுவலகத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்து, தற்போது அந்த கேஸ் கோர்ட் வரை சென்று இருக்கிறது. எனினும் இன்றுவரை என்னையும் என் குடும்பத்தாரையும் குறிவைத்து, பாலியல் அவதூறுகளை முன்வைத்து வருவதும் நடந்து கொண்டே இருக்கிறது. என்னையும் என் கேரக்டரையும் எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி இந்த சமூக வலைதளத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் காரணமாகவே சுமார் ஆறு மாதத்துக்கு முன்பாக எனக்கு நரம்பு முறிவு ஏற்பட்டது பற்றி அனைவருக்குமே தெரியும். எனினும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக என்னால் அதை கடந்து வர முடிகிறது. எனினும் என்னைப் போலவே எல்லோரும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள் என்று கருத முடியாது. எனவே இப்படியான சைபர் பாலியல் துன்புறுத்தலை நிறுத்துங்கள்!” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ALSO READ: சிவாங்கி தெறி டான்ஸ்.. ஷூட்டிங் Spot-ல் அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் மாதிரியே! வைரல் வீடியோ!