செம்ம.. இப்படி ஒரு கான்செப்ட்-ஆ? .. இரண்டு BIGGBOSS நாயகிகள் நடிக்கும் '4 SORRY'..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜான் விஜய், காளி வெங்கட், டேனியல், ரித்விகா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ள  ‘4 Sorry’ படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது.

Advertising
>
Advertising

நிலையில் படம் குறித்து இயக்குநர் சக்திவேல் கூறுகையில், “படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நான்கு வித்தியாசமான கதைகள். வாழ்க்கையில் தவறு செய்யும்போது அதை உணர்ந்து எப்படி சாரி கேட்கிறோம் என்பதுதான் படத்தின் அடிநாதம்.

இதில், டேனியல் நடித்த முதல் கதையில் தேவையில்லாத விஷயத்தில் சிக்கிக்கொள்ளும்போது அதனால் ஏற்படும் நிகழ்வுகளை முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும். சாக்ஷி அகர்வால், கார்த்திக் நடித்துள்ள கதையில் நிச்சயதார்த்தம் அன்று அவர்களிடையே ஒரு பிரச்சனை முளைக்கிறது. அதை அவர்கள் எப்படி மேற்கொள்கிறார்கள் என்பதை கிராண்டியர் மேக்கிங்கில் சொல்லப்படுகிறது.

காளி வெங்கட், ரித்விகா நடித்த மூன்றாவது கதையில் நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தும் அவர்களுக்கு அச்சுறுத்தறுத்தலாக இருக்கும் மனிதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும், ஜான்விஜய் சஹானா நடித்துள்ள நான்காவது கதையில் ‘எங்கேயும் எப்போதும்’ போல் சுவாரஸ்யமான பஸ் பயண கதையையும் சொல்லியுள்ளோம்.

இந்த வித்தியாசமான கதைக்களத்துக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பு கொடுக்க வேண்டும். மீண்டும் உங்களை ஒரு புதிய முயற்சியில் சந்திக்கிறேன்” என்று தெரிவித்தார். வெங்கடேஷ் பிரசாத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு, பிரசன்னா சிவராமன் இசையமைக்க, சேப்டி ட்ரீம் சார்பிகல் செந்தில் பிரபு, சக்திவேல், ஜெகநாரயணன், கார்த்திக் அசோகன் தயாரித்துள்ளனர். சிவகுமார் இணைந்து தயாரித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Riythvika Sakshi Agarwal starring 4Sorry running

People looking for online information on 4Sorry, John Vijay, Kaali Venkat, Riythvika, Sakshi Agarwal will find this news story useful.