பிக்பாஸ் நிகழ்ச்சி இம்முறை பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்கு போனவர் நடிகர் ரியோ. தற்போது பிக்பாஸில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அவரது நடவடிக்கைகளை சிலர் ஆதரித்தும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் பதிவிடு விடுகின்றனர். முக்கியமாக குரூப்பிஸம் பிரச்சனையில் போட்டியாளர்கள் சிலர் அவர் மீது கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் ரியோவின் மனைவி ஸ்ருதி தனது கணவர் பற்றி நெகிழ்ச்சியான ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "நான் உன்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி இருக்க கூடாது. எனக்கு தெரியாது அது நமக்கு ஏற்ற இடமில்லை என்று. எது நடந்தாலும் உனக்காக நான் இருப்பேன். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் உன்னை பற்றியே யோசித்துக் கொண்டு இருப்பேன்" என்று கூறியிருக்கிறார்.