கமலிடம் பிக்பாஸ்-ல் ரியோ சொன்னது நியாபகம் இருக்கிறதா.?!! சொல்லியதை செய்து காட்டி அசத்தல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரியோ ராஜ் வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரியோ ராஜ். இதை தொடர்ந்து இவர் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். மேலும் இவர் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். 

பிக்பாஸ் போட்டியின் போது நடிகர் கமல், போட்டியாளர்களிடம் பிக்பாஸ்-ல் இருந்து வெளியே சென்றபின் என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டார். இதற்கு போட்டியாளர்களும் பல்வேறு பதிலை கொடுத்திருந்தனர். 

இதில் ரியோ ராஜிடம் கமல் கேட்டதற்கு, இங்கிருந்து சென்றவுடன் முதல் வேலையாக நல்ல இயற்கை சூழல் உள்ள இடத்திற்கு ட்ரெக்கிங் போல சென்று ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என தெரிவித்தார். 

அதன்படியே அவர் தற்போது தனது மனைவியுடன் ஒரு சூப்பரான இடத்திற்கு விசிட் அடித்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதன் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், ''To Another World'' என பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

ரியோ ராஜ் வெளியிட்ட வைரல் போட்டோ | Biggboss rio raj latest post goes viral in nets

People looking for online information on BiggBoss 4 Tamil, Kamal hassan, Rio Raj will find this news story useful.