VIDEO: "மூடிட்டு UNFOLLOW பண்ணுங்க.. ஏன் அசிங்கமா பேசுறீங்க?".. நேரலையில் கொந்தளித்த பிக்பாஸ் RESHMA!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் மாதிரி, வணக்கம்டா மாப்ளே படங்களில் நடித்த ரேஷ்மா தன் சமூக வலைப்பக்கத்தில் நெகடிவாக கமெண்ட் செய்பவர்களை பற்றி காட்டமாக விமர்சித்து அறிவுரை கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.

“நெகடிவ் கமண்ட்ஸ் பதிவிடுவது நெகடிவாக பேசுவது, உடல் மற்றும் முகம் தொடர்பான அருவருத்தக்க விஷயங்களை கமெண்ட் பண்ணுவது, எந்த செலிபிரிட்டியாக இருந்தாலும் எந்த போஸ்டாக இருந்தாலும் அங்கு வந்து தவறாகவும் மோசமாகவும் மனிதாபிமானமில்லாமலும் எழுதுவது உள்ளிட்டவை தொடர்கின்றன. ஃபேக் ஐடிக்களில் இருந்து வந்து இப்படி வந்து எழுதுவதை பொதுவாக நான் படிப்பதில்லை, இருப்பினும் குடும்ப நண்பர்கள் எல்லாம் படிக்கிறார்கள். இப்படியெல்லாம் ஒரு நபரை பற்றி தவறாகவும் அவருக்கு கொரோனா வரவேண்டும், தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என ஏகத்துக்கும் எழுதுகிறார்கள். சாதாரணமானவர்களின் ஐடிக்களில் கூட போய் இப்படி எழுதுகிரார்கள்.

நான் அமெரிக்காவில் படித்தேன். அமெரிக்காவில் வாழ்ந்தேன். இந்தியாவில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்கிறேன். இந்த கொரோனா லாக்டவுனில் என்னால் முடிந்த அளவில் பாசிடிவான எண்ணங்களை எனக்கும் மற்றவர்களுக்குமானதாக விதைக்கிறேன். நெகடிவாக வந்து கமெண்ட் பண்ணுகிறவர்கள் யார் பேஜை பின் தொடரவேண்டுமோ மூடிக்கிட்டு போய் ஃபாலோ பண்ணுங்க. எவனும் அப்படி வந்து எனக்கு கமெண்டுகளை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சோஷியல் மீடியாவில் ஆர்டிஸ்ட்டுகளை பற்றி அசிங்கம் அசிங்கமாக எழுதுவதை நிறுத்திவிட்டு சோஷியல் மீடியாவை நல்லதற்கு பயன்படுத்துங்கள். எங்கள் பேஜ்களை விட்டுவிட்டு உங்களது வேலையை பாருங்கள். இந்த மாதிரி ஆட்கள் எவனும் எனக்கு சோறு போடல. என் முகம் எப்படி இருக்கு? நான் என்ன டிரெஸ் போட்டு புகைப்படம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை.

ALSO READ:“இன்பராஜை விட மோசமானவங்க!”.. பாலியல் குற்றம் புரியும் 'பள்ளி ஆசிரியரின்' நிஜ கதாபாத்திரம் பற்றி ராட்சசன் இயக்குநர் பகீர்!

நான் கமெண்டுகளை படிப்பதில்லை. என் இன்ஸ்டாகிராம் பேஜ்களை ஹேண்டில் செய்வது நான் இல்லை. ஆனால் என் நெருங்கிய நண்பர்கள், எனக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லாம் இந்த கன்றாவிகளை எல்லாம் படித்து வேதனை அடைகிறார்கள். ஏனென்றால் அவர்கள் என் மீது அன்பு வைத்திருப்பவர்கள். அதனால் தான் சொல்கிறேன்.

பிடிக்கவில்லை என்றால் செலிபிரிட்டிகளின் பேஜ்களை அன்ஃபாலோ பண்ணிவிட்டு போய் வேலையை பாருங்கள். ஏன்யா? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? உங்க வீட்லலாம் பெண்களே இல்லையா? அவன் அவன் கொரோனாவால் செத்துகிட்டு இருக்கான். இப்படி நெகடிவாகவும் தப்பு தப்பாகவும் யோசித்துக் கொண்டிருந்தால் எப்பதான் மாறுவீர்கள்? முடிந்தால் அன்பை பரிமாறுங்கள். ஒரு நல்ல வார்த்தையை சொல்லுங்கள்.!” என குறிப்பிட்டுள்ளார்.

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட பிரபலமான ரேஷ்மா பசுபுலேட்டி தற்பொது சன்.டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEO: "மூடிட்டு UNFOLLOW பண்ணுங்க.. ஏன் அசிங்கமா பேசுறீங்க?".. நேரலையில் கொந்தளித்த பிக்பாஸ் RESHMA! வீடியோ

Biggboss Reshma pasupuleti angry speech negative commenters

People looking for online information on Reshma Pasupuleti will find this news story useful.