அடேயப்பா.. “லீவு வேணும்!”.. அதுவும் கமல் VOICE-ல.. நம்ம BIGGBOSS ராஜூ அப்பவே அப்படி..! VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் முக்கியமான போட்டியாளராக விளங்குபவர் ராஜூ ஜெயமோகன்.

Advertising
>
Advertising

விஜய் டிவி சீரியல் நடிகராக பிரபலமான ராஜூ தன்னுடைய பல்வேறு திறமைகளை பிக் பாஸ் வீட்டுக்குள் நிரூபித்து வருகிறார். முன்னதாக பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் அமர வைத்துக் கொண்டு, அவர்களிடம் மிமிக்ரி செய்து காட்டி அசத்தினார்.

முக்கிய நடிகர்கள் பலர் போன்று மிமிக்ரி செய்த ராஜூ குறிப்பாக ஆர்.எக்ஸ்.100 பைக் தொடங்கி பல்வேறு வாகனங்களின் சிறப்பு சப்தங்களை மிமிக்ரி செய்து காட்டி அசத்தினார்.

இந்த நிலையில் ஆங்கிலத்திலான லீவ் லெட்டர் ஒன்றில் வரும் விஷயத்தை ஒவ்வொரு நடிகரும் அல்லது பிரபலமும் பேசி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் குரலிலேயே மிமிக்ரி செய்து காட்டியிருக்கிறார் ராஜூ. அதன்படி பிரபல பருத்தி வீரன் நடிகர், ரகுவரன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், கமல்ஹாசன், ஜெய் உள்ளிட்ட பலரது குரல்களிலும் லீவ் லெட்டரில் இருக்கும் விஷயத்தை ராஜூ பேசி இருக்கிறார்.

பல வருடங்களுக்கு முன் ராஜூவின் கல்லூரி காலங்களில் எடுத்த இந்த வீடியோவில், அவரது கல்லூரி நண்பர்கள் மத்தியில் நடந்த இந்த ஜாலியான நிகழ்வில், அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்கின்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரிடமும் எதார்த்தம் மற்றும் எளிமையாக பழகும் ராஜூ,போகிற போக்கில் கலாய்த்து விடவும் செய்வார். பெரிதாக ஆக்ரோஷத்தையோ கோபத்தையோ காட்டாதா ராஜூ, சைலண்டாக மற்றவர்களை வச்சி செய்யும் பல்வேறு தருணங்களை பிக்பாஸில் பார்க்க முடிகிறது.

பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு சிறந்த எண்டர்டெயினராகவும் ராஜூ திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடேயப்பா.. “லீவு வேணும்!”.. அதுவும் கமல் VOICE-ல.. நம்ம BIGGBOSS ராஜூ அப்பவே அப்படி..! VIDEO வீடியோ

Biggboss raju college days mimicry throwback video

People looking for online information on Biggboss raju jeyamohan, BiggBossTamil5, Raju, RajuJeyamohan will find this news story useful.