விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் விஜய் டிவி நடிகர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ராஜூ டைட்டிலை வென்றிருக்கிறார்.
எத்தனையோ STARS-க்கு நான் AV பண்ணிருக்கேன்
ஃபினாலேவுக்கு முதல் நாள் தனக்காக எடிட் பண்ணப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட AV குறும்படத்தை பார்த்து அழுத ராஜூ, புரோகிராம் புரொடியூசராக தானும் இப்படித்தான் எத்தனையோ ஸ்டார்களுக்கு இப்படி AV குறும்படத்தை கட் பண்ணி போட்டதாகவும், இப்போது தனக்கு யாரோ இப்படி செய்திருக்கிறார்கள் என்றும் நெகிழ்ந்து உருகி அழுதார்.
டைட்டில் வின்னர் ராஜூ
ராஜூவுக்கு வாழ்த்து சொல்லியிருந்த பிக்பாஸூம், “ஒரு எழுத்தாளனாக, நடிகனாக நீங்கள் கடந்து வந்த பாதையில் கற்களும் முட்களும் இருந்திருக்கும், இனி அவை மலர்ப்படுகையாய விரியட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் இறுதி நாளன்று கமல்ஹாசன், ராஜூவை பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனின் டைட்டில் வின்னராக அறிவித்தார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் காசோலை பரிசு வழங்கப்பட்டது.
இயேசு நாதர் 30 வயசுல அற்புதங்களை நிகழ்த்தினார்
முன்னதாக கதை சொல்லும் டாஸ்கில் பேசிய ராஜூ, பிக்பாஸ்க்கு எப்படி கண் ஃபேமஸோ, அதேபோல் தானும் கண்ணுக்கு ஃபேமஸ் என்று கூறியிருந்தார். மேலும் அந்த பேச்சின்போது, “இயேசு நாதர் 30 வயசுல அற்புதங்களை நிகழ்த்தியதாக சொல்வார்கள். அப்படி பார்த்தால் எனக்கு இப்போ 30 வயதாகிறது. அதனால் நான் இந்த பிக்பாஸ் வீட்டில் வென்று, அப்படி ஒரு அற்புதம் என் வாழ்க்கையிலும் நிகழ நினைக்கிறேன்” என்பதாக ராஜூ குறிப்பிட்டிருந்தார்.
சொன்னதை செஞ்சு சாதிச்ச ராஜூ
இப்படி தன் வாழ்க்கை போக்கு பற்றி, முன்னுணர்ந்து ஓரளவுக்கான அனுமானத்துடன் இருந்த ராஜூ, கதை சொல்லும் டாஸ்கிலேயே தன் வெற்றியை கிட்டத்தட்ட ஊர்ஜிதப் படுத்தி சொன்னது இப்போது வரை ஆச்சரியமாக உள்ளதாக ரசிகர்கள் பலரும் கூறிவருகின்றனர். ஆக, ராஜூ அன்று கதை சொல்லும் டாஸ்கில் சொன்னபடியே தன்னுடைய 30வது வயதில் ராஜூ அற்புதத்தை நிகழ்த்திவிட்டார். வாழ்த்துக்கள் ராஜூ பாய்!
Also Read: "செவரு உயரம் பத்தாது.. ஏத்தி கட்டுங்க!".. Bigg Boss OTT ப்ரோமோவுல கமல் சார் யார சொல்றாரு?