பறக்கும் ராசாளியே .. கைகளை விட்டு புல்லட் ஒட்டிய பிக்பாஸ் ரச்சிதா.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் த்ரோ பேக் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Varisu : இந்தா வந்துருச்சுல்ல.. விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி..!

தமிழில் 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் பிரபலம் ஆனவர் ரச்சிதா மகாலட்சுமி. மக்கள் மத்தியில் மீனாட்சி என அழைக்கப்படும் அளவிற்கு இந்த தொடர் அவருக்கு ஃபேவரைட்டாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இந்த சூழ்நிலையில் அண்மையில் நிறைவு பெற்ற பிக் பாஸ் சீசன் 6 ல் கலந்து கொண்டார் ரச்சிதா.  பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

தமிழில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாசில் கலந்துகொண்ட ரச்சிதா அவருடைய தனித்துவமான விளையாட்டு திறன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் இவர் கலந்துகொண்ட டாஸ்க்குகள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகவும் மாறின.

Images are subject to © copyright to their respective owners.

91 நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த ரச்சிதா அதன் பிறகு வெளியேறினார். பின்னர், பிக்பாஸ் வீடு குறித்தும் சக போட்டியாளர்கள் குறித்தும் அவர் பேசியிருந்த வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் வைரலானது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இயங்கக்கூடிய ரச்சிதா தற்போது தன்னுடைய த்ரோபேக் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோவில் புல்லட் பைக்கை அவர் ஸ்டைலாக ஒட்டிச் செல்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ரச்சிதா அந்த பதிவில்,"எதுவாக இருந்தாலும் உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read | Bakasuran : “பெண்கள் அழகா ப்ரொஃபைல் பிக்சர் வெக்கலாமா?” - மோகன்.G கருத்து குறித்து செல்வராகவன்..!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Rachitha Mahalakshmi driving Bike video Goes Viral

People looking for online information on Bigg Boss Rachitha, Rachitha Mahalakshmi will find this news story useful.