“மூஞ்சிக்கு நேரா பேசுங்க.. எனக்கு நடிக்க வராது”.. பாவனிக்கும் அக்‌ஷராவுக்கும் வெடித்த சண்டை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லுக்சுரி பட்ஜெட் டாஸ்க் போய்க்கொண்டிருக்கிறது. அதன்படி ‘பஞ்சதந்திரம்’ என்கிற இந்த டாஸ்கில் நாணயங்களை எடுத்து வைத்துக் கொண்டு, நாமினேட் செய்யப்பட்ட நண்பர்களுக்கு உதவலாம் என்கிற சலுகை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது.

biggboss pavani akshara conflict coin task biggbosstamil5

அதன்படி, போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதில் குழுவாக சேர்ந்து ஒருவரை காப்பாற்றுவதற்காகவும், ஒருவர் தனிப்பட்ட முறையில் இன்னொருவரை காப்பாற்றுவதற்காகவும், தனக்காகவும் மாறி மாறி காயின்களை எடுத்து வைத்துக்கொண்டு, மற்றவரிடம் கொடுத்து மறைத்து வைத்துக் கொண்டும் இருந்து வந்தனர்.

biggboss pavani akshara conflict coin task biggbosstamil5

இந்த நிலையில் நிரூப் காயினை எடுக்கும்போது அபினய் பார்த்துவிட்டதால், நிரூப் பாதாள சிறைக்கு சென்றதை அடுத்து, அடுத்தடுத்த போட்டியாளர்கள் சிறைக்கு செல்ல, கடைசியில் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வெளி வந்தனர். இந்த நிலையில் கடைசியாக தாமரைக்கு சிபி காயின் கொடுத்து உதவினார். இதேபோல் இசைக்கும் சிபி காயினை கொடுத்தார்.

அதன்பிறகு அக்ஷராவின் பெட்ரூமிற்கு சென்று பாவனி அக்ஷராவை பார்த்து “உங்களுக்கு ஏதாவது என்னுடன் பிரச்சினையா?” என்று கேட்க, அக்ஷரா “இல்லை” என்கிறார். மீண்டும் தொடர்ந்த பாவனி, “அப்படி ஏதாவது பிரச்சினை இருந்தால் என்னை நாமினேட் பண்ணி எழுத வேண்டாம் அல்லது பின்னாடி பேச வேண்டாம்!” என்று நேரடியாக கூறுகிறார்.

அதற்கு அக்ஷராவும், “நான் என்ன பேசினேன்? என்ன எழுதினேன்? எனக்கு அந்த மாதிரி உங்களுடன் பேச வேண்டிய அவசியமும் கூட கிடையாது!” என்றெல்லாம் கூற, மீண்டும் பாவனி, அதையே சொல்கிறார். அதன் பின்னர் நடந்ததை பற்றி அக்ஷரா, ராஜூ, இமான் அண்ணாச்சி ஆகியோரிடம் தனியே சென்று கூறுகிறார்.

இதேபோல் பிரியங்காவுக்கு, கடைசி நாணயம் யாரிடம் இருக்கிறது என்கிற சந்தேகம் வலுக்க, முதலில் சின்ன பொண்ணுவை அவர் பரிசோதித்தார். அதனைத் தொடர்ந்து அபிஷேக் மற்றும் பிரியங்கா இருவரும் ராஜூவிடம் சென்று அக்ஷராவுக்காக காயினை எடுத்து வைத்திருக்கிறாரா என்று பேசிப்பார்த்தனர்.

அப்போது மதுமிதாவையும் அக்ஷராவையும் உட்கார வைத்துக்கொண்டு பிரியங்காவும், அபிஷேக்கும் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கு பாவனி உள்ளே, நுழைந்து பாவனியை, நாமினேட் செய்ய வேண்டுமென்று, அக்ஷரா கூறியதாக அபினய் தன்னிடம் சொன்ன விஷயத்தை சொல்லி, “ஏதாவது பிரச்சினை இருந்தால் முகத்துக்கு நேரே பேசுங்கள்” என அக்‌ஷராவிடம் பாவனி காத்திரமாக கூறுகிறார்.

இப்படி காயின் டாஸ்க், பிக்பாஸ் வீட்டில் கலவரமாகவும் களேப்ரமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.

Biggboss pavani akshara conflict coin task biggbosstamil5

People looking for online information on AksharaReddy, BiggBoss5, BiggBossTamil5, PavaniReddy will find this news story useful.