பிக்பாஸ்-ல் ஷிவானிக்கு எதிராக அதிரடி காட்டிய CONTESTANTS.. அதிருப்தியில் ஷிவானி சொன்ன வார்த்தை.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் 73 நாட்களை கடந்து பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இந்த வாரம் போட்டியில் சுவாரஸ்யமும் ஈடுபாடும் குறைந்தவர்களை தேர்வு செய்ய, பிக்பாஸ் சொல்ல, அநேக போட்டியாளர்கள் ஷிவானியையும் கேபியையும் தேர்வு செய்கின்றனர். 

இதனால் அதிருப்தியடைந்த ஷிவானி, 'நாமினேஷன் என்பது ஓகே, ஆனால் குற்றம் சுமத்துவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை'' என நறுக்கென்று சொல்கிறார். மேலும் கேபி மற்றும் ஷிவானி தனியே ஓய்வெடுக்கும் அறையில் இருக்க வைக்கப்படுகிறார்கள். 

 

பிக்பாஸ்-ல் ஷிவானிக்கு எதிராக அதிரடி காட்டிய CONTESTANTS.. அதிருப்தியில் ஷிவானி சொன்ன வார்த்தை.!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft contestants sent shivani and gabriella to rest room

People looking for online information on BiggBoss Tamil 4, Gabriella Charlton, Shivani Narayanan will find this news story useful.