நேற்றைய தினம் பிக்பாஸில் முழுவதுமே சண்டைகளாக இருந்தது. சுரேஷ் சக்ரவர்த்தி அனைவரையும் கிளப்பி விட்டு பின்னாடி இருந்து வேடிக்கை பார்ப்பது போன்ற காட்சிகள் இருந்தது. சனம் ஷெட்டியின் உண்மையான கரிசனத்தையும் அவர் மோசமாக கடிந்து கொண்டது ரசிகர்களிடையே எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இன்று வெளியாக இருக்கும் புதிய புரோமோவில் போட்டியாளர்களில் பாதி பேர் அரக்கர்களாகவும், பாதி பேர் அரசர்களாகவும் இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது இரண்டாம் சீசனில் நடந்தவைகள் தான் ஞாபகம் வருகிறது. ஆனால் ஒன்று சிறப்பான செய்தி இருக்கிறது என்பது மட்டும் உறுதி.