யார் வீட்ல விசேஷம்? கோலாகலமாக கொண்டாடிய BIGGBOSS HOUSEMATES.. அர்ச்சனா மிஸ் பண்ணது யாரை?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் சீசன் 4 அண்மையில் முடிந்தது. இந்த போட்டியில் ஆரி வெற்றி பெற்றார்.

பிக்பாஸ் போட்டியாளர்களை பொறுத்தவரை, தங்கள் வீட்டில் எந்த விசேஷம் வந்தாலும் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் எப்போதும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

பிக்பாஸ் இறுதிப் போட்டிக்கு முன்பே அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் சந்திப்பு நடந்தது. அதன் பின்னர் ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் ஜீவா, அருள்நிதி நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ படத்தின் ப்ரிவியூ ஷோ-வில் பிக் பாஸ் பிரபலங்கள் கலந்துக் கொண்டு சந்தித்துக் கொண்டனர். இதையடுத்து ஷிவானி தனது செல்லப் பிராணியின் முதல் பிறந்தநாளை கொண்டாட்டம்,  அர்ச்சனாவின் தங்கை அனிதாவுக்கு நடந்த வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் அனைவரும் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளர் சோம் சேகர் தமது பிறந்தநாளை சக ஹவுஸ்மேட்களுடன் கொண்டாடி இருக்கிறார். இவர்களுடன் பிக்பாஸ் ஹவுஸ்மேட்கள் ஷிவானி, அர்ச்சனா, ரியோ, ரியோவின் மனைவி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி என பலரும் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த நிகழ்வில் ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷாவை மிஸ் பண்ணுவதாக அர்ச்சனா தமது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த பல ரசிகர்கள் என்னதான் பிக் பாஸ் வீட்டுக்குள் சண்டை போட்டுக் கொண்டாலும் இப்போது அனைவரும் ஒற்றுமையுடன் விசேஷங்களில் பங்கேற்பதும் கொண்டாடுவதும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கமெண்ட் செய்திருக்கின்றனர். இதுபற்றிப் பேசிய சோம், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி. ‌என்னை ஏதாவது ஒரு உயரத்துக்கு கொண்டு செல்லும் வகையில் என்னை சுற்றி இவ்வளவு நல்ல மனிதர்கள் இருப்பதும் தினமும் என்னை ஊக்குவிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் அர்ச்சனா தனது கணவர் மற்றும் மகளுடன் கலந்து கொண்டிருக்கிறார். இன்னும் சிலரும் தங்களது உறவினர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பரவி வருகின்றன.

ALSO READ: "வந்தாச்சு டாக்டர் ரிலீஸ் அறிவிப்பு".. கொண்டாட தயாராகும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

யார் வீட்ல விசேஷம்? கோலாகலமாக கொண்டாடிய BIGGBOSS HOUSEMATES.. அர்ச்சனா மிஸ் பண்ணது யாரை? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss mates together in Som shekar function பிக்பாஸ் குடும்பம்

People looking for online information on Archana, BiggBossTamil4, Rio, Shivani, Som Shekar, Trending, VijayTelevision will find this news story useful.