பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. தற்போது ஹர்பஜன் சிங் உடன் 'ப்ரண்ட்ஷிப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், சதீஷ் போன்ற பலரும் நடிக்கின்றனர். இந்நிலையில் அடுத்ததாக ஆரியுடன் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
சமீபத்தில் தனது போட்டோ ஷுட் புகைப்படங்களை பதிவிட்ட அவர், அதற்க்கு தலைப்பாக "நான் வாழ்ந்தேன், காதலித்தேன், இழந்தேன், பிரிவை சந்தித்தேன், காயப்பட்டேன், நம்பிக்கை வைத்தேன், சில தவறுகளையும் செய்தேன். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக நான் பாடங்களை கற்றேன்" என்று கூறியுள்ளார். லாஸ்லியா இந்த அதிரடியான பதிவை பலரும் லைக் செய்து உள்ளனர். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags : Losliya, Friendship, Biggboss, Kavin, Harbajan Singh