அரக்கர்கள் டாஸ்க்கில் பல இடங்களில் சுரேஷ், சனம் ஷெட்டியை தகாத வார்த்தைகளினால் பேசினார். இது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராகப் பதிவிட்டு வந்தனர். முதலில் சனம் மிகவும் மவுனம் காத்தார். மேலும் அந்த டாஸ்க்கின் போது, சுரேஷ் கையில் வைத்திருக்கும் தடியால் தாக்குவதையும், அதன்பின் சனம் மிகவும் கோபமடைந்து பேசுவதையும் காண முடிந்தது.

இந்லையில் இன்றைய தினம் கமல்ஹாசன் போட்டியாளர்களைச் சந்திக்கும் நாள் என்பதால் இரண்டாம் புரோமோ வெளியாகி உள்ளது. அதில் இந்த வாரத்தின் மிகவும் பேசப்பட்ட பகுதியான சனம், சுரேஷின் சண்டையைப் பற்றித் தான் பேசுகிறார். இந்நிலையில் சனம் சுரேஷை வாடா போடா என்று பேசியதை பற்றி விசாரிக்கிறார் கமல். எனினும் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.