VIDEO: BIGGBOSS-அ வெச்சு இப்படி ஒரு புது SHOW வரப்போகுதா? யாருலாம் ஜோடி சேரப்போறாங்க? #TRENDINGNOW

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பானது.

BiggBoss Jodi new program? viral talks Vjay Television பிக்பாஸ்

இதில் முதல் சீசனில் ஆரவும் 4வது சீசனில் ஆரியும் வெற்றி பெற்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் பிரம்மாண்டமான நிகழ்ச்சியாகவும், அதிக கவன ஈர்ப்பை பெறும் நிகழ்ச்சியாகவும் மாறியது பிக் பாஸ்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் அதாவது ஐந்தாவது சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஏங்கத் தொடங்கிவிட்டனர். இதனிடையே இந்த சீசனில் யாரெல்லாம் பங்கு பெறப் போகிறார்கள் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இன்னொருபுறம் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒட்டி இன்னொரு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. அதன்படி பிக்பாஸ் ஜோடி என்கிற இந்த புது நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்ப உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து கடைசி சீசன் வரை பங்கேற்ற போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இவர்கள் ஒவ்வொருவரும் இன்னொருவருடன் ஜோடி சேர்க்கப்பட்டு இந்த நிகழ்ச்சி கலகலப்பாகவும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால் யார் யார் ஜோடி சேர்ந்தால் அந்த காம்போ எப்படி இருக்கும் என்பது குறித்த பேச்சுக்களை இப்போது இணையதளத்தில் ரசிகர்கள் பேச தொடங்கி இருக்கின்றனர். பிக்பாஸ் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியினை அடுத்து தொகுத்து வழங்கப் போவது யார் என்பது குறித்தும் சமூக வலைப்பக்கங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஐந்தாவது நிகழ்ச்சி மற்றும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: Reception-ல் குத்து டான்ஸ் .. மாஸ் காட்டிய விஜய் சேதுபதி.. இந்த Celebrity-க்கு கல்யாண வயசுல பொண்ணா!

VIDEO: BIGGBOSS-அ வெச்சு இப்படி ஒரு புது SHOW வரப்போகுதா? யாருலாம் ஜோடி சேரப்போறாங்க? #TRENDINGNOW வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Jodi new program? viral talks Vjay Television பிக்பாஸ்

People looking for online information on Bala, BiggBossTamil5, BiggBssTamil, Kavin, Trending, VijayTelevision BiggBossJodi will find this news story useful.