விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் மூலம் ஏராளமான சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் அரங்கேறி இருந்தது.

ஒரே ஒரு டாஸ்க்கின் பெயரில், கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வந்தது. அதிலும் குறிப்பாக ஷெரினாவுக்கு காயம் ஏற்பட்டதில் இருந்து அவரை தள்ளி விட்டது யார் என்பது பற்றி பெரிய விவாதமே பிக்பாஸ் வீட்டில் உருவாகி இருந்தது.
அசீம் உள்ளிட்ட சிலர், தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளி விட்டு அதன் மூலம் தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், விக்ரமன் உள்ளிட்ட சிலர், தனலட்சுமி செய்திருப்பார் என எப்படி உறுதியாக சொல்கிறீர்கள் என்றும் எதிர் கேள்விகளை முன் வைத்திருந்தனர். தொடர்ந்து, இதுகுறித்து பல்வேறு போட்டியாளர்களும் கருத்தினையும் விவாதத்தையும் தெரிவித்து கொண்டிருக்க, பிக்பாஸ் வீடே அல்லோலப்பட்டு கிடந்தது. வார இறுதியில் முறையான ஆவணங்களுடன் கமல்ஹாசன் வரும் போது தான், ஷெரினாவை தள்ளி விட்டது யார் என்பது குறித்து இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதற்கு மத்தியில், Luxury Budget டாஸ்க்கும் நடைபெற்று வந்தது. இதிலும், மணிகண்டன், ஜனனி, ரச்சிதா, நிவா, தனலட்சுமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர். தற்போது பொம்மை டாஸ்க்கும் முடிவுக்கு வந்ததாக தெரியும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளர்களும் Worst Performer யார் என்பதையும் தெரிவிக்கின்றனர். இறுதியில், ஷிவின் மற்றும் அசீம் Worst Performer மற்றும் சிறப்பாக பங்கெடுக்காத நபர் என்றும் கூறி சிறை செல்லவும் பிக்பாஸ் கூறுகிறார்.
பொம்மை டாஸ்க் முடிவடைந்த பிறகு பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாகவும் போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். இதனிடையே, விக்ரமனை ஜாலியாக மைனா நந்தினி விரட்டியது தொடர்பான விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது.
மகேஸ்வரி, ஆயிஷா மற்றும் மைனா நந்தினி ஆகியோர் பேசி கொண்டிருக்க நடுவே விக்ரமன் உட்கார்ந்திருக்கிறார். அப்போது, இவர் எல்லாத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறார் என மைனா நந்தினி திடீரென உணர்ந்து கொள்ள விக்ரமனை அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்லவும், "எந்திருச்சு போய் அந்த பக்கமா படுப்பா" என மைனா நந்தினி ஜாலியாக குறிப்பிடுகிறார்.
இதன் பின்னர் பேசும் விக்ரமன், "நான் சும்மா இங்க படுத்து இருக்கிறேன். நீங்க என்ன பேசுறீங்கன்னு கேட்டுட்டு இருக்கேன்" என சிரித்துக் கொண்டே கூறுகிறார். தொடர்ந்து விக்ரமனை பற்றி வேடிக்கையாக பேசும் ஆயிஷா, "இது நாளைக்கு ஒரு டாபிக்கா வரும். மைனா அவங்க என்ன சொல்றாங்கன்னா பிரச்சனையே எனக்கு தேவை இல்ல. நான் ஒதுங்கிருவேன், நான் கேட்க எல்லாம் மாட்டேன்னு சொல்றாங்க. அப்புறம் எதுக்கு இந்த வீட்டுல இருக்கணும்ங்குறாரு இவரு" என்கிறார்.
இதன் பின்னர், அப்படி எல்லாம் இல்லை என்றும் விக்ரமன் கூறுகிறார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.