கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் TTF வாசன்.
Also Read | "8-வது அதிசயம்".. மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உருகிய ரவீந்தர்!
இதற்கு காரணம், தனது யூடியூப் பக்கத்தில் விலை உயர்ந்த தனது பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யும் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருவதால், பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.
சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த வாசன் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் பரவி வைரலாகின. டிடிஎஃப் வாசனுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர். அண்மைக்காலமாக டிடிஎஃப் வாசன் 2k கிட்ஸ்களின் பேராதரவுடன் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.
ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் TTF வாசன், சில வழக்குகளில் சிக்கி இருந்தார். இருப்பினும் தற்போது பைக்குகளில் பயணம் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.
அதேபோல் டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த Gp முத்து. இவரது காமெடி வீடியோகள் மிகவும் வைரலாகியது. டிக்டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில் வாசன், தனது முதுகில் ரசிகர்களின் முகங்களை பச்சைக்குத்தும் போது அந்த இடத்திற்கு ஜி.பி. முத்து வருகை தந்துள்ளார். மேலும் வாசனை புகழ்ந்து பேசியுள்ளார். "நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட.. டிடிஎஃப் வாசன் தனது ரசிகர்களுக்காக 40 பேர் முக்த்தை பச்சை குத்துறார். உன் ரசிகர்கள் மேலே உள்ள பாசத்தை பாராட்டுறேன் தம்பி" என பேசியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
Also Read | தாத்தாவான தயாரிப்பாளர் 'கோபுரம்' அன்புச் செழியன்.. மகள் சுஷ்மிதாவுக்கு குழந்தை பிறந்தது 😍