ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | "யாரு சாமி நீங்க".. விக்ரமனை மனசார பாராட்டிய நிவாஷினி.. ராபர்ட் சொன்னதுதான் அல்டிமேட்..!
இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.
இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரின் மற்றும் நிவாஷினி ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.
இதனிடையே, இந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசீமிடம் பிக் பாஸ் கூறி இருந்தார். இதனால் லுங்கி மற்றும் பனியன் காஸ்டியூம் உடன் வீட்டுக்குள் இருக்கிறார். இந்நிலையில், அமுதவாணனுக்கு ஹேர் ஸ்டைலை மாற்றும்படி சொல்லியிருக்கிறார் பிக்பாஸ். இப்படி அடுத்தடுத்து சுவாரஸ்ய சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வீட்டுக்குள் மைனா, நிவாஷினி, கதிர், குயின்சி ஆகியோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, மைனா,"மொத்தமா நிகழ்ச்சியோட ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு? எப்போதும் பிக்பாஸ் கடைசில கொஞ்சம் இறங்கும். நான் பார்த்திருக்கேன். இந்த சீசன் எப்படின்னு தெரியல. TRP எல்லாம் எப்படி இருக்கு?" என நிவாஷினியிடம் கேட்கிறார்.
அப்போது பேசும் பிக்பாஸ்,"ஹான் அப்புறம்" என சொல்ல அங்கிருந்த அனைவரும் திகைத்துப்போகின்றனர். பின்னர் பேசும் மைனா, "ஐயா தெரியாம கேட்டுட்டேன். வெரி சாரி" என சிரித்தபடியே சொல்கிறார். அதற்குள் பிக்பாஸ்,"அப்புறம் கடைசி வாரத்துல கீழே போகுதுன்னு சொன்னீங்கள்ல. அப்படி போகாம இருக்க, இப்படி பேசுறதை விட்டுட்டு என்ன செய்யணுமோ செய்யுங்க" என்கிறார். இதனை கேட்டு சிரிக்கும் மைனா "நம்ம சீசனை பத்தி சொல்லல" என்கிறார்.
Also Read | GP முத்துக்கு பிக்பாஸ் கொடுத்த FUN வார்னிங்.. தலைவரு அரண்டு போய்ட்டாரு😂..!