போடு! நம்ம BIGGBOSS கேபியா இது? பிரபல விஜய் டிவி சீரியலில் மாஸ் எண்ட்ரி! அசத்தலான PROMO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay Tv Eeramana rojave season 2 Promo: விஜய் டிவியில் மிகவும் பரவலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த முக்கியமான சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலின் இரண்டாவது சீசன் தற்போது வரவிருக்கிறது. இதில் பிக்பாஸ் கேப்ரியலா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீசனுக்கான புரோமோ விஜய் டிவியில் வெளியாகி வைரலாகி வருகிறது.

BiggBoss Gabriella in eeramana rojave 2 promo கேபி ஈரமான ரோஜாவே
Advertising
>
Advertising

BiggBoss கேப்ரியலா (Gabriella Charlton):

பிக்பாஸ் கேப்ரியலா, சமுத்திரகனியின் அப்பா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர். தொடர்ந்து விஜய் டிவி பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இவருடைய பல போட்டோஷூட்கள் எப்போதும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

BiggBoss Gabriella in eeramana rojave 2 promo கேபி ஈரமான ரோஜாவே

இந்த நிலையில் இவர் விஜய் டிவி சீரியலில் தோன்றியிருக்கிறார். அதன்படி கேபி நடித்திருக்கும் ஈரமான ரோஜாவே சீரியலின் பரபரப்பான புரோமோ, இந்த சீரியலின் முழு கதையையும் சொல்லும்படியாக அமைந்திருக்கிறது.

கடத்தப்பட்ட மணப்பெண்:

இந்த புரோமோவில் காட்டப்படும் கதைப்படி, கேபி ஒருவரை காதலிக்கிறார். கேபியின் அக்காவுக்கும், அவரது காதலரின் அண்ணனுக்கும் திருமண ஏற்பாடு மண்டபத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

அந்த சமயம் கேபியின் அக்காவான திருமணப் பெண்ணை யாரோ சிலர் கடத்திக்கொண்டு காரில் சென்று கொண்டிருக்கின்றனர். இதை அவ்வழியே வரும் கேபியின் காதலரும், மணமகனின் தம்பியுமானவர் பார்த்துவிடுகிறார். உடனே மணப் பெண்ணை கடத்திச் செல்லும் காரை அவர் பின்தொடர்ந்து செல்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த காரில் இருப்பவர்களிடம் சண்டை போட்டு மணப்பெண்ணை மீட்டு, தன் பைக்கில் அமர வைத்து முகூர்த்த நேரம் முடிவதற்குள் செல்ல வேண்டும் என மிக வேகமாக திருமணம் நடைபெறக்கூடிய மண்டபத்தை வந்தடைகிறார்.

திருமண மண்டபத்தில் செம்ம ட்விஸ்ட்:

அங்கு வந்த கேபியின் காதலர், மணமகளை அழைத்துக் கொண்டு மண்டபத்திற்கு உள்ளே வேகமாக ஓடி வர, அங்கு அவ கண்டது அதிர்ச்சி காட்சி.

ஆம், மணமகள் காணவில்லை என்பதால், மணமகளின் தங்கையான கேபி கழுத்தில் அந்த மாப்பிள்ளை தாலி கட்டிக்கொண்டிருக்கிறார். கேபி கண்ணீருடனும் அதிர்ச்சியுடனும் தன் காதலரையும் அக்காவையும் பார்க்கிறார்.

கேபியின் காதலரும் அதிச்சியுடன் இந்த காட்சியை பார்க்கிறார். இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் டிவி சீரியலில் ரீ-எண்ட்ரி:

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7-ஆம் வகுப்பு C பிரிவு தொடரில் நடித்ததற்கு பிறகு, பிக்பாஸில் பங்கேற்ற நடிகை கேபி ஈரமான ரோஜாவே  சீரியலின் 2வது சீசன் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இது அவருடைய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதாவது கேபியின் இந்த புது அவதாரத்துக்கு அவர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

Also Read: டூடுடு.. டூடுடு.. டுட்டூ டூடூ.. இந்த வாரம் 2 Eimination-ஆ?.. Promo-வில் தெறிக்கவிடும் கமல்ஹாசன்! BiggBossTamil5

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Gabriella in eeramana rojave 2 promo கேபி ஈரமான ரோஜாவே

People looking for online information on Biggboss actress, BiggBoss Contestant, Eeramana rojave season 2, Eeramana rojave season 2 promo, Gabriella Charlton, Gabriella Charlton in eeramana rojave 2 will find this news story useful.