யோகிபாபுவுடன் கைகோர்க்கிறார் BIGGBOSS-ல வெறித்தனமான ரசிகர்களை சம்பாதிச்ச இளம் நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் தமிழ்.

விஜய் டிவி மற்றும் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பிக்பாஸ் வீட்டில் பங்கேற்ற போட்டியாளர்களுள் ஒருவர் ஓவியா.

களவாணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, தன்னுடைய இயல்பினால் இன்னும் பிரபலமானார்.  இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவில்லை என்றாலும், நடிகை ஓவியா மில்லியன் கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் இதயங்களை வென்றார். குறிப்பாக ரசிகர்களை 'ஆர்மி' என்று அழைக்கப்படும் போக்கு 'ஓவியா ஆர்மி' மூலம் இன்னும் சூடுபிடித்தது. ஓவியாவின் பரந்துபட்ட ரசிகர்கள் 'ஓவியா ஆர்மி' என்று அறியப்பட்டனர்.

கலகலப்பு, காஞ்சனா பட வரிசை, 90 எம்.எல். என பல திரைப்படங்களில் நடித்த ஓவியா, தற்போது தமது அடுத்த படம் குறித்த அறிவிப்பை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆம், ஓவிய பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன் இணைகிறார் என்பதுதான் அந்த அட்டகாசமான தகவல்.

முன்னதாக களவாணி திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரவலாக அறியப்பட்ட மற்றும் விரும்பப்பட்ட ஓவியா, களவாணி படத்தின் அடுத்த பாகமான களவாணி 2-ஆம் பாகத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தான் நடிகர் யோகிபாபுவுடன் ஓவியா நடிக்கும் இந்த புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கப்படவிருப்பதாக நடிகை ஓவியா தமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

விடியல் ராஜூ தயாரிப்பிலான இந்த திரைப்படம், செப்டம்பர் 24-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்படவிருப்பதாக ஓவியா தமது அறிவிப்பில் பகிர்ந்துள்ளார்.

மேற்படி, இந்த படத்தின் இதர படக்குழுவினர் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யோகிபாபு, அண்மையில் சந்தானம் நடிப்பில், ஜீ 5 ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் டிக்கிலோனா என்கிற காமெடி டைம் டிராவல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கலான நகைச்சுவை கேரக்டரில் நடித்துள்ளார். தொடர்ந்து தல அஜித்தின் வலிமை, தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படங்களிலும் யோகிபாபு நடித்து வருகிறார். 

இதனிடையே சௌந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல் ராஜூ, ஏவிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.எஸ்.பிரபு தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி யோகிபாபு மற்றும் ஓவியா இணையும் இந்த திரைப்படத்துக்கு தற்காலிகமாக ப்ரொடக்‌ஷன் நம்பர் 1 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த படத்தின் டைட்டில் லுக் செப்டம்பர் 23-ஆ,ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்றும் இதனை இசையமைப்பாளர் மற்றும் இளம் நடிகர் ஜி.வி.பிரகாஷ் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read: தெறிக்கவிட்ட சமந்தா! .. “மாமா”-னு ஒரே ஒரு வார்த்தை தான்.. ஒட்டு மொத்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி..

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss fame Oviya join hands yogibabu in next official

People looking for online information on Biggboss, Biggbosstamil, BiggBossTamilSeason1, Oviya, OviyaArmy, Trending, Yogi Babu will find this news story useful.