அந்த சூப்பர் ஹிட் டீமுடன் பிக்பாஸ் லாஸ்லியா.. அடுத்த படம் இதுதான்..!! - ஹீரோ யார் தெரியுமா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் பிரபலமடைந்த லாஸ்லியா தற்போது நடிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. 

இலங்கையில் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா. இவர் விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று தமிழ் ரசிகர்களிடையே பிரபலமனார். இவருக்காக லாஸ்லியா ஆர்மி எனும் பேஜ்கள் உருவாக்கப்பட்டன. இதை தொடர்ந்து இவர் தற்போது ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரென்ட்ஷிப், ஆரி அர்ஜுனா ஹீரோவாக நடிக்கும் படம், ஆகியவற்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது லாஸ்லியா நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராட்சசன், ஓ மை கடவுளே உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த Axcess Film Factory தயாரிக்கும் இத்திரைப்படத்தில், ஹீரோவாக பூர்னேஷ் அறிமுகமாகவுள்ளார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ சரவணன் இயக்கவுள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

லாஸ்லியாவின் அடுத்தப்படம் | BiggBoss Fame Losliya to team up with this young hero

People looking for online information on Axcess Film Factory, Biggboss Losliya, Losliya, Poornesh will find this news story useful.