"புதுசா மாடு வாங்கி இருக்கோம்.." BIGGBOSS பாலாஜி வெளியிட்ட வீடியோ.. "இத இப்டி கூட சொல்லலாம் போலயே"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ, வெற்றி பெற்றதன் காரணமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இதுவரை ஐந்து சீசன்களும் நடந்து முடிந்துள்ளது. அதே போல, டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும், பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த பிக் பாஸ் சீசனை எதிர்பார்த்தும் ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பலரும் மக்கள் மத்தியில் முன்பு இருந்ததை விட, இன்னும் அதிகம் பிரபலம் ஆகவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

அந்த வகையில், மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்தவர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் தமிழின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட பாலாஜி, அதில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார், தொடர்ந்து,நடைபெற்ற பிக் பாஸ் அல்டிமேட்டிலும் போட்டியாளராக வந்த பாலாஜி, டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் பாலாஜி, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்த வண்ணம் இருப்பார். இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தான் புதிதாக கார் வாங்கியுள்ளது தொடர்பாக வீடியோவை  வெளியிட்டுள்ள பாலாஜி, அதனை சற்று வித்தியாசமாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். அதாவது, இன்ஸ்டாவில் அதிகம் வைரலான "புதுசா மாடு வாங்கி இருக்கோம்" என ஆடியோவுடன், தனது காரை ரசிகர்களுக்கு பாலாஜி அறிமுகம் செய்கிறார்.



பாலாஜி கார் வாங்கியது தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss fame balaji buy new car fans congratulate on instagram

People looking for online information on Balaji Murugadoss, New Car, Reels Video will find this news story useful.