இளம் நடிகையுடன் பிக்பாஸ் ஆரவ்-க்கு நடந்த திருமணம்.. 'நேரில் வந்து வாழ்த்திய பிரபலங்கள்.'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆரவ்-க்கும் இளம் நடிகை ராஹி என்பவருக்கும் திருமணம் இன்று நடந்து முடிந்துள்ளது. 

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். விளம்பர மாடலான ஆரவ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் இயக்குநர் மணிரத்னத்தின் 'ஓகே கண்மணி', விஜய் ஆண்டனியுடன் 'சைத்தான்' உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர், சரண் இயக்கத்தில் 'மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்', 'ராஜ பீமா' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் ஆரவின் திருமணம் சூப்பராக நடந்து முடிந்துள்ளது. கௌதம் மேனன் இயக்கி வரும் ஜோஷுவா திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ராஹி என்பவரை இவர் திருமணம் செய்துள்ளார். இந்த திருமண நிகழ்வில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், கவிஞர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஜோடிகளை வாழ்த்தினர். இதையடுத்து இணையத்தில் வெளியான இந்த கல்யாண புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. 

 

 

இளம் நடிகையுடன் பிக்பாஸ் ஆரவ்-க்கு நடந்த திருமணம்.. 'நேரில் வந்து வாழ்த்திய பிரபலங்கள்.' வீடியோ

பிக்பாஸ் ஆரவின் திருமணம் | Biggboss fame arav and actress raahei wedding with stars wish

People looking for online information on Aarav, Actress Raahei, Arav Marriage, BiggBoss Arav will find this news story useful.