பிக்பாஸ் நடிகை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்ட கேள்விக்கு, நெட்டிசன்கள் செம பதிலை கொடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் ரைசா வில்சன். இவர் தனுஷ் நடித்த வி.ஐ.பி-2 படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இதை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் இவர் நடித்த பியார் ப்ரேமா காதல் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.
இந்நிலையில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். வரும் 21 அன்று உலகம் அழியப்போகிறது என்றால், இந்த 4 நாட்களில் என்ன செய்வீர்கள் என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ரசிகர்களில் பலர், தங்களது க்ரஷிடம் காதலை சொல்லிவிடுவோம் என்பதை பதிலாக கொடுத்துள்ளார்கள். இதை குறிப்பிட்டுள்ள ரைசா, ''பலர் இதையேதான் பதிலாக சொல்கிறார்கள். அப்படியானால் பலரும் தங்கள் காதலை சொல்லாமல் இருக்கின்றனர் என தெரிகிறது. சீக்கிரம் அந்த காதலை சொல்லுங்கள்'' என கூறியுள்ளார் இந்த இளம் நடிகை.!