தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக சென்று கொண்டிருக்கிறது.

Also Read | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்'.. ஷூட்டிங் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா? செம்ம
விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது.
மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இதனால் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த விஷயங்கள், இணையத்தில் எப்போதுமே ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் கலகலப்பாக ஆரம்பித்த பிக்பாஸ் 6 ஆவது சீசன், அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் அணியாக பிரிந்த பிறகு, ஏகப்பட்ட பிரச்சனைகள் மற்றும் விவாதங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வருகிறது.
இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொள்கிறது. உள்ளே எந்த அளவுக்கு பிரச்சனைகள் இருந்தாலும் தொடர்ந்து ஜிபி முத்து செய்து வரும் விஷயங்கள், பலரது ஆதரவினையும் பெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜிபி முத்து, எப்போதும் கலகலப்பாக இருந்தாலும் தான் நடிப்பதாக தனலட்சுமி குறிப்பிட்டதை எண்ணி கண்ணீர் விடவும் செய்திருந்தார்.
தனலட்சுமி அப்படி குறிப்பிட்டதும் இருந்த இடத்தில் இருந்து வேகமாக ஜிபி முத்து எழ, பதிலுக்கு தனலட்சுமியும் எப்படி எகிற வருகிறீர்கள் என கேட்டு கோபம் அடைந்தார். இதன் பின்னர், போட்டியாளர்கள் அனைவரும் அவர்களை சமரசம் செய்ய தனலட்சுமி தொடர்ந்து கோபத்தில் இருந்தார்.
அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது பேசியுள்ள ஜனனி, "அவர் எகிறிக் கொண்டு வந்ததாக நீ கூறுகிறாய். ஆனால், நீ திருப்பி பேசிய விதம் தவறு. வயதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என நான் உன்னிடம் கூறிய போது, நீ பிக்பாஸ் வீட்டிற்கு வந்தேன் என குறிப்பிட்டாய். ஆனால், பிக்பாஸ் வீடு என்றால் அம்மா, அப்பா, அக்கா என இது ஒரு வீடு மாதிரி.
இங்கே நீ அனைவரையும் வயதுக்கு ஏற்ற மாதிரி பார்க்க வேண்டும். அனைவரையும் ஒரே நிலையில் எடுத்துக் கொள்ள இது ஒன்றும் ரீல்ஸ் கிடையாது. அவருடைய வயதுக்கு அவர் எகிறினார் என்றால் அவர் எங்களுக்கு அப்பா மாதிரி தான். ஒரு இடத்தில் கோபப்பட்டால் பொறுமையாக போயிருக்க வேண்டும்.
உன்னை விட வயது குறைவான நான் தலைவராக இருந்து ஒரு வேலையை உன்னிடம் சொல்லும் போது எதிர்த்து பேசவும் வாய்ப்புண்டு. நீ நடந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை" என கூறினார். உடனே அங்கிருந்து எழுந்து சென்ற தனலட்சுமி, "பிக்பாஸ் வீட்டில் வராமலே இருந்திருப்பேன்" என குறிப்பிட்டு அழவும் ஆரம்பித்து விட்டார்.
முன்னதாக, ஜிபி முத்துவும் கண்ணீர் விட்டிருந்ததை தொடர்ந்து, தற்போது தனலட்சுமியும் அழ ஆரம்பித்துள்ளது பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து பரபரப்பை கிளப்பி உள்ளது.
Also Read | "என் அப்பா, அம்மாக்கு அப்புறம் இப்டி பண்ணது நீங்க தான்".. உருகிய ஜிபி முத்து!!