"அசீம் தான் உண்மையான அண்ணா".. பிக்பாஸ் தனலட்சுமி - அசீமின் லேட்டஸ்ட் ரீல்ஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்ட தனலட்சுமி மற்றும் அசீமின் லேட்டஸ்ட் ரீல்ஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Image Credit : vijay television

Also Read | தளபதி 67-ன் அடுத்த அப்டேட்.. விமான பயணத்தில் படக்குழு.. நடிகர் விஜய் எடுத்த வீடியோ😍..!

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6 அண்மையில் நிறைவடைந்தது. இதில் கடைசியாக அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, அமுதவாணன் மற்றும் கதிர் எஞ்சி இருந்தனர். அப்போது வீட்டுக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட பணமூட்டையுடன் தான் வெளியேறுவதாக அறிவித்தார் கதிர். அவரை தொடர்ந்து வீட்டுக்குள் பணப்பெட்டி வைக்கப்பட்டது. அதனை அமுதவாணன் எடுத்துக்கொண்டு வெளியேறினார். மிட் வீக் எவிக்ஷனில் மைனா வெளியேற வீட்டுக்குள் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

Image Credit : vijay television

இதனை தொடர்ந்து நடைபெற்ற ஃபினாலே-வில் அசீமை வெற்றியாளராக கமல்ஹாசன் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சோசியல் மீடியா பிரபலம் தனலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 6-ன் டைட்டில் வின்னரான அசீமுடன் தனலட்சுமி எடுத்திருந்த இந்த ரீல்ஸ் தற்போது வைரலாகி வருகிறது. அதில் தனலட்சுமி,"பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே எனக்கிருக்கும் ஒரேயொரு அண்ணா" என குறிப்பிட்டிருக்கிறார். 'சிவனும், சக்தியும் சேர்ந்தா' பாடலுக்கு இவர்கள் செய்திருக்கும் ரீல்ஸ் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Image Credit : vijay television

பிக்பாஸ் வீட்டுக்குள் எப்போதும் பரபரப்புடன் இயங்கி வந்தவர் தனலட்சுமி. சமீபத்தில் நம்முடைய சேனலுக்கு அசீம் சிறப்பு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அப்போது, தனலட்சுமியை தனது தங்கை எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும், நிகழ்ச்சியின்போதே தனலட்சுமிக்கு போன் செய்து அவர் பேசியிருந்தார். அப்போது, அசீம் தனக்கு சகோதரர் போன்றவர் என தனலட்சுமி தெரிவித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அசீம் மற்றும் தனலட்சுமி இணைந்து எடுத்த இந்த ரீல்ஸ் அவர்களது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | "ஒரு லெஜெண்டை இழந்துவிட்டோம்".. பழம்பெரும் நடிகர் விஸ்வநாத் மறைவு.. நடிகை குஷ்பு இரங்கல்..!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Dhanalakshmi and azeem latest Reels goes viral

People looking for online information on Azeem, BiggBoss Dhanalakshmi, BiggBoss Dhanalakshmi and azeem latest Reels, Dhanalakshmi will find this news story useful.