நேற்றைய தினம் அர்ச்சனா, பாலா இடையே நடந்த சண்டை, கடைசியில் மிகவும் எமோஷனலாக முடிந்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் 2-வது புரோமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதாவது தங்களின் மனதில் இருக்கும் நினைவுகளையும், யாரை மிகவும் மிஸ் செய்கிறார்கள் என்பது பற்றியும் கூற வேண்டும். இதனையடுத்து போட்டியாளர்கள் பலரும் தங்களது குடும்பத்தினர் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கண்கலங்குகின்றனர்.
