"குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 3-யில் நானா?"... பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வரும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதியோடு முடிவடைய உள்ளது. அடுத்த சீசனுக்காக மக்கள் இப்போதே ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த சுசித்ரா பாலாவுடன் நெருங்கிய நண்பராக பழகி வந்தார். ஆனால் இரண்டு வாரத்திலேயே அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பாடகி சுசித்ரா ஒரு நல்ல சமையல் கலைஞர் என்பது பலருக்கும் தெரியாது. வெளிநாடுகளுக்கு சென்று சமையல் பாடங்களை கற்று தேர்ந்தவர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் "தயவுசெய்து குக் வித் கோமாளி மூன்றாம் சீசனில் பங்கேறுங்கள். உங்களை மிகவும் எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சுசித்ரா "உங்களுக்கு நான் அந்த நிகழ்ச்சியில் தான் பங்கேற்க வேண்டும் என்றால். தயவு செய்து என்னை எதிர்பார்க்காதீர்கள்" என்று மறுப்பது போன்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss contestant hesitates cooku with comali பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட பதிவு

People looking for online information on Cooku with comali, Suchitra will find this news story useful.