அடிச்சு பறக்கவிட்ட சிபி.. ஆக்ரோஷமான ஹவுஸ்மேட்ஸ்.. கிழிந்து தொங்கிய பிக்பாஸ் வீடு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் வீட்டில் தலைவர் போட்டிக்காக பால் பண்ணையில் பால் சேகரிக்கும் புதிய டாஸ் கொடுக்கப்பட்டது. இதற்கென சில விதிமுறைகளை முன்பே பிக் பாஸ் வீட்டுக்குள் கொடுத்திருந்தனர்.

Advertising
>
Advertising

அதன்படி, அடுத்த வார தலைவருக்கான போட்டியாளர்களை தேர்வு செய்வதற்கான செண்பகமே செண்பகமே எனும் பால்பண்ணை டாஸ்க் அறிவிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு அணியிலும் 7 பேர் வீதம் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டது.

இவர்களுக்கு பால் சேகரிக்கும் பாட்டில்கள் நிறைந்த ட்ரேக்கள் கொடுக்கப்பட்டன. இதற்கென கார்டன் ஏரியாவில் ஏரியாவில் செட்டப் செய்யப்பட்ட பொம்மை கறவை மாடு ஒன்று இருந்தது. அதிலிருந்து பால் வரும். அதை போட்டியாளர்கள், ஒரே நேரத்தில் அடித்துக்கொண்டு, பாட்டிலில் பாலை நிரப்பி அங்கிருந்து கொண்டு வந்து தங்கள் அணியில் இருக்கும் கேன்களில் நிரப்பி கொண்டனர். இதுதான் அந்த டாஸ்க்.

இந்த டாஸ்கிங் போது போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டும் ஆடியும் ஓடியும் தள்ளிவிட்டும் பொருட்களை உடைத்தும் விளையாண்டனர். இதில் ஆரஞ்சு மற்றும் ப்ளு என இரண்டு அணிகளில் ஆரஞ்சு அணியில் ராஜூ, அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, சுருதி ஆகியோர் இருக்கின்றனர். ப்ளூ அணியில் வரும் அக்ஷரா, பிரியங்கா உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

இந்த இரண்டு அணிகளும் முதலில் அடித்துக் கொண்டு இடித்துக் கொண்டு வந்து விழுந்ததை எல்லாம் ஜாலியாக எடுத்துக் கொண்ட போட்டியாளர்கள், போகப்போக தீவிரமாகினர். ஒருவரை ஒருவர் சீரியஸாக தள்ளிவிட்டும் அடித்துக் கொண்டும் ஓடத் தொடங்கினர்.  அப்போது வருண், மற்றவர்களின் பாட்டிலிலிருந்து பாலை பிடுங்க, இந்த கேம் சீரியஸ் ஆகி விட்டது. இதில் பாவனி மிகவும் சிரத்தையுடனும் சீரியஸாகவும் பொறுப்புடனும் தன் வேலையைச் செய்தார். அண்ணாச்சி மிகவும் துடிப்பாக விளையாடினார். ராஜூவும் அக்ஷராவும் அடித்து பிடித்து வேற லெவலில் விளையாடினர். குறிப்பாக சிபி, வெறித்தனமாக விளையாடுவதையும் காண முடிந்தது.

இதில் ஐக்கி, பாலில் தண்ணீர் கலந்து வைக்க இன்னொருபுறம் தாமரையை இதையெல்லாம் சென்று கண்காணித்து விட்டு வரச் சொல்லி அனுப்புகிறார் ராஜூ. ஆனால் தாமரை தயங்க இசைவாணி சென்று பார்க்கிறார். கொஞ்ச நேரத்தில் சிபி மிகவும் கோபமாகவும் ஆக்ரோஷமாகவும் விளையாட, இன்னொரு பக்கம் அண்ணாச்சி, பிரியங்கா அனைவருமே காண்டாகி ஆடத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அக்ஷராவிடம் செல்லும் சிபி, பாலை அபகரிக்க முயற்சி செய்ய அக்ஷரா தன் வேகத்துக்கு ஈடு கொடுத்து அவரிடம் போராடினார்.

அதன் பிறகு அங்கிருந்த அந்த செட்டப் மாட்டினை இரண்டாக உடைத்து விட்டனர். இதினிடையே கடுப்பான சிபி அனைத்து விதிகளையும் பிரேக் செய்து அங்கிருந்த எல்லா பொருட்களையும் அடித்து உடைத்து தூக்கி எறிந்தார்.

அதன் பின்னர் தன் கையை பிடித்து அமுக்கியதற்காக தாமரை நிரூப்பிடம் , நிரூப், “என்ன இப்படி பேசுறீங்க? டாஸ்க் என்றால் அப்படித்தான் இருக்கும்” என்று கூற உடனே தாமரை மீண்டும் கத்துகிறார். பின்னர் குறுக்கே வந்த பாவனி, தாமரையை குற்றம் சாட்ட அதற்கு நிதானமாக பதில் சொல்லாமல் தாமரை பொய் பேசாதே என்று சொல்லி ஆவேசமாக கோபப்பட்டு, அடிக்கவே கை ஓங்கினார். பதிலுக்கு பாவனியும் கையை ஓங்கினார்.

கடைசியாக சிபி கலெக்ட் செய்த பாட்டிலை, வருண் கவுண்ட்டில் சேர்க்காததால் கேம் ட்விஸ்ட் அடிக்க, ப்ளூ அணி ஜெயித்தது. மொத்தத்தில் இந்த டாஸ்கில் அக்‌ஷரா, ராஜூ, வருண், இசை, சுருதி, இமான் அண்ணாச்சி, பிரியங்கா உள்ளிட்டோரின் விளையாட்டுகள் ரசிகர்களிடையே பாசிடிவான விமர்சனங்களையும், ஐக்கி, தாமரை, சிபி, நிரூப்,  உள்ளிட்டோர் கலவையான விமர்சனங்களையும் பெற்றுள்ளனர்.

இதனிடையே சிபியிடம் கோபப் பட்டிருந்தால் மன்னிக்க வேண்டும் என அக்‌ஷரா மன்னிப்பு கேட்டார். உண்மையில் சிபியும் அக்‌ஷராவிடம் டாஸ்கின் போது ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். இதில் ஐக்கி மற்றும் சிபி உள்ளிட்டோரின் விதிமீறல்கள் குறித்து பலரும் பேசி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss ciby aggressive thamarai angry milk task

People looking for online information on Akshara Reddy, Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, Pavani, Thamarai, VijayTelevision will find this news story useful.