பிக்பாஸ் வீட்டுக்குள் கடைசியாக நடந்த பலூன் உடைத்தல் போட்டி பரபரப்பாக சென்றது.
பலூனை இடுப்பில் கட்டிக்கொண்டு, கையில் கிடைக்கும் ஊசியை எடுத்து அடுத்தவர் பலூனை உடைத்து தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இந்த கெடுபிடியான டாஸ்க்கில் கடைசியாக சின்ன பொண்ணு & தாமரை இருவரும் மோதிக் கொண்டனர். அதில் தாமரைச்செல்வி வெற்றி பெற்றார். அவரை பிக்பாஸ் வீட்டின் தலைவர் என்றும் பிக்பாஸ் அறிவித்தார்.
இதனையடுத்து தாமரை செல்வியை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து பேசிய பிக்பாஸ், “இனி நீங்கள் தான் இந்த வீட்டின் தலைவர். பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக உங்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கிறது!” என்று கூறியிருந்தார். தற்போது மீண்டும் கன்ஃபெஷன் ரூமுக்கு தாமரைச்செல்வியை அழைத்த பிக்பாஸ் நிறையவே கூறியுள்ளார்.
அதில், “உங்களுக்கு இந்த வீட்டை நிர்வாகிக்கும் பொறுப்பு இருக்கிறது. அதை மறந்துவிட வேண்டாம். அனைவரும் காலையில் தாமதமாக எழுந்து தயாராகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மீட்டிங்கிற்கு அழைத்த நேரத்திற்கு யாரும் வருவதில்லை. மைக்கை சரியாக மாட்டுவதில்லை. இவற்றையெல்லாம் சரி செய்யுங்கள். மேற்கொண்டு உங்களுக்கு என்ன விதிகள் தேவையோ, அந்த விதிகளை நீங்கள் அமைத்துக் கொள்ளலாம்” என்றெல்லாம் பிக்பாஸ் அறிவுறுத்தி அனுப்பி இருக்கிறார்.
இதன் பிறகு கன்ஃபெஷன் அறையில் இருந்து வெளியே வந்த தாமரைச்செல்வி, “தலைவரை மதிக்கிறீங்களா இல்லையா?” என்று நகைச்சுவையாக கேட்டார். பின்னர் அனைவருக்கும் பிக்பாஸ் சொன்ன விஷயங்களை மீண்டும் நினைவுபடுத்தி, அவற்றுக்கு உட்பட்டு நடக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார் தாமரை செல்வி.