பிக்பாஸ் பாலாவின் ரீசன்ட் ஸ்டேட்மென்ட்.. ''எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும்..'' - எமோஷனல் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் பாலாவின் ரீசன்ட் பதிவு இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் பிரபலமான இவர் பிக்பாஸ் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் இவர் ரன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில் பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். 

மேலும் இதுகுறித்த அவரது பதிவில், ''வாழ்க்கையில எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், யார் என்ன சொன்னாலும், ஒரு தீர்வுதான். சரி வச்சிக்கோங்கன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கனும்'' என பதிவிட்டுள்ளார். 

மேலும் ''உங்கள் அன்புக்கு நன்றி, நான் நலமாக இருக்கிறேன்'' என அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் பாலா எமோஷனல் பதிவு | Biggboss balaji murugadoss recent statement goes viral

People looking for online information on Balaji Murugadoss, Biggboss Bala will find this news story useful.