பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார்.ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பாலா இல்லை என்றால் இந்த சீசன் இவ்வளவு விறுவிறுப்பாக சென்று இருக்காது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில் பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார்.

2017-ஆம் வருடம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். ஒட்டுமொத்த தமிழக மக்களும், பிரபலங்களும் சேர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கும்படி மத்திய மாநில அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்ட சமயத்தில் ஆரியை பற்றிய பழைய வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. ஆரி ஒரு சமூக ஆர்வலர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இயற்கை விவசாயம் மற்றும் அதை சார்ந்த பல துறை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்களோடு இணைந்து அவர் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அவரை தாக்க பயந்து ஓடாமல் அதே இடத்தில் நின்று அழுத வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இந்நிலையில் ஆரி மட்டும் இல்லை பாலாஜியும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு போராடியுள்ளார். ஆம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்களோடு பீட்டாவுக்கு எதிரான வாசகங்களை கையில் ஏந்தி நின்ற புகைப்படத்தை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.