இந்த வயசுல யாராவது VIDEO GAMES விளையாடுவாங்களா..?!! - அட., அந்த பிக்பாஸ் நடிகர் பகிர்ந்த வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற நடிகர் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் வேட்டையனாக கலக்கியவர் கவின். அதனைத் தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்த 'நட்புனா என்னனு தெரியுமா' படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது 'பிகில்' அம்ரிதாவுடன் இணைந்து அவர் 'லிஃப்ட்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வயதில் யாராவது வீடியோ கேம்ஸ் விளையாடுவாங்களா..? என்ற மீம்-உடன், தனது நண்பர்களுடன் இணைந்து இப்போது வரை வீடியோ கேம்ஸ் விளையாடும் போது எடுத்த புகைப்படங்களை இணைத்து அவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். 90-ஸ் கிட்ஸ்களின் மெமரீஸ்களை நினைவுப்படுத்தும் இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் கவின் வெளியிட்ட புகைப்படம் | Biggboss actors recent video on playstation wins hearts

People looking for online information on Biggboss Kavin, Kavin, PlayStation will find this news story useful.