பிக்பாஸ் ஆரவின் அப்பா திடீர் மரணம்.. சோகத்தில் குடும்பத்தினர். - ரசிகர்கள் இரங்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட ஆரவின் தந்தை இன்று காலமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 1 போட்டியில் பங்கேற்று பிரபலமானவர் ஆரவ். இவர் இப்போட்டியின் டைட்டில் வின்னராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து இவர் மார்கெட் ராஜா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அண்மையில் இவருக்கு இளம் நடிகை ராஹியுடன் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் தற்போது ஆரவிடம் இருந்து ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அவரது தந்தை இன்று 1.30 மணி அளவில் மாரடைப்பின் காரணமாக இயற்கை எய்தியதாக தெரிய வந்துள்ளது. அவரின் இறுதிச் சடங்குகள் நாகர்கோவில் இன்று மாலை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. 

ஆரவின் வீட்டில் ஏற்பட்ட இந்த திடீர் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், ரசிகர்கள் அவரது தந்தை மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றன. 

 

பிக்பாஸ் ஆரவின் அப்பா திடீர் மரணம்.. சோகத்தில் குடும்பத்தினர். - ரசிகர்கள் இரங்கல் வீடியோ

பிக்பாஸ் ஆரவின் தந்தை காலமானார் | Biggboss actor arav's father passed away

People looking for online information on Aarav, Arav Father will find this news story useful.