கொரோனாவையும் பொருட்படுத்தாமல் ஆரி செய்த செயல்... வைரல் வீடியோ... அந்த மனசு இருக்கே சார்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். அதேபோல் ஆரிக்கு கொடிக்கான ரசிகர்கள் உருவாகி விட்டனர் அதற்கு முக்கிய காரணமாக அவரது நேர்மையும், மன உறுதியும், சமூக அக்கறையும் ஒரு காரணம். இப்படி  எந்தவித எதிர்பார்ப்புமின்றி களமிறங்கி இன்று அனைவரையும் கவர்ந்திருக்கும் ஆரி நிச்சயம் பிக்பாஸ் வரலாற்றில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆரி ஒரு சமூக ஆர்வலர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இயற்கை விவசாயம் மற்றும் அதை  சார்ந்த பல துறை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்களோடு இணைந்து அவர் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அவருடன் இணைந்து செயலாற்றிய அவரது நண்பர் கூறும்பொழுது கூட "ஆரிக்கு இருக்கும் வலிமையை நான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தான் பார்த்தேன். எப்பொழுதும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள மாட்டார். ஆனால் எப்பொழுதும் பின்னின்று மக்கள் அனைவருக்கும் உணவு கிடைத்ததா, மக்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்களா என்பது போலவே சிந்தித்துக் கொண்டிருப்பார். அதுவும் சிறிது கூட ஓய்வு இல்லாமல் அவர் உறுதியுடன் இருந்தார். ஒருமுறை போலீஸ் தடியால் அடித்த போதும் பின்வாங்கி ஓடாமல் அதே இடத்தில் நின்று அழுதார்" என்று கூறியிருந்தார்.

தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஆரி வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தனது சமூக அக்கறையையும் வெளிப்படுத்தி வருகிறார். அதன் ஒரு அங்கமாக கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் கோயம்பத்தூர் பகுதியில் மாஸ்க் அணிய மக்களுக்கு நேரடியாக சென்று அறிவுறுத்துகிறார். மேலும் இலவசமாக மாஸ்க் வழங்கிவருகிறார். தனது பாதுகாப்பையும் மீறி மக்களுக்காக சேவை செய்து வருவது பாராட்டத்தக்கது.

Tags : Aari, Biggboss

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss aari's social deed amidst corona ஆரி செய்த செயல் வைரல் வீடியோ

People looking for online information on Aari, Biggboss will find this news story useful.