பிரபல பிக்பாஸ் நடிகையுடன் ஜோடி சேர்ந்த ஆரி... வெளியானது அசத்தலான டிரெய்லர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இறுதிப் போட்டிக்கு அனைவரும் தயாராக உள்ள நிலையில், டைட்டிலை யார் கைப்பற்றுவார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. எனினும் ஆரி தான் டைட்டில் ஜெயிப்பார் என்று பலரும் யூகித்து வருகின்றனர். எதுவாயிருந்தாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் நடிகர் ஆரியின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். காரணம் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிறகு நடிகரின் இரண்டாவது படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'அலேகா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனேவே கடந்த வாரம் ஆரியின் 'பகவான்' படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே போட்டியாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நடிகை ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கிறார். எஸ்.எஸ்.ராஜமித்ரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த  படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல பிக்பாஸ் நடிகையுடன் ஜோடி சேர்ந்த ஆரி... வெளியானது அசத்தலான டிரெய்லர்..! வீடியோ

Tags : Aleka, Aari

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss aari aleka film trailer realesed பிக்பாஸ் நடிகையுடன் ஜோடி சேர்ந்த ஆரி

People looking for online information on Aari, Aleka will find this news story useful.