பிக்பாஸ் வீட்டில் இதுவரை நமீதா மாரிமுத்துவை தவிர்த்து நாடியா, சின்னப்பொண்ணு, அபிஷேக், மதுமிதா, சுருதி, இசைவாணி, ஐக்கி பெர்ரி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேட் ஆகினர். இவர்களை தொடர்ந்து அபிஷேக் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். ஆனால் அவர் மீண்டும் வெளியேற்றப்பட்டார். இதேபோல் பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சஞ்சீவ் மற்றும் கோரியோகிராபர் அமீர் எண்ட்ரி கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கமல்ஹாசன் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படும் போட்டியாளர் குறித்த அறிவிப்பை தொடங்கினார். முன்னதாக தாமரை, அக்ஷரா அபினய் உள்ளிட்டோர் காப்பாற்றுவதாக அடுத்தடுத்து அறிவித்த கமல்ஹாசன் கடைசியாக இமான் வெளியேற்றப்படும் தகவலை நேரடியாகவே அறிவித்தார்.
அதன்பின்னர் இமான் அண்ணாச்சி, “ஜாலி.. எப்படியாவது 100 நாள் இருந்துடலாம் என்று நினைத்தேன். 70 நாளில் வெளியேறுகிறேன்!” என்று சொல்லி ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடமும் இருந்து விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்.
அப்போது அனைவரும் சற்றே கண்ணில் தண்ணீர் விடத் தொடங்கினர். அப்போதும் இமான் அண்ணாச்சி குறித்து ஹவுஸ்மேட்ஸ் பேசும்போது, “உங்கள் கேட்டகிரியில் 70 நாள் இருந்த போட்டியாளர் நீங்களாகத்தான் இருப்பீர்கள்!” என்று கூறினார்கள். இதனிடையே இமான் அண்ணாச்சி குறித்து முன்பொருமுறை பேசும்போது 100 நாள் வரை இமான் அண்ணாச்சியை அழைத்துச் செல்வேன் என ராஜூ பேசியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ராஜூ, இமான் அண்ணாச்சி வெளியேறும்போது முதல்முறையாக உடைந்து அழுதார். அழுதுகொண்டே தூணில் சாய்ந்து சரிந்து விழவும் போனார். அவரைப் பலரும் தேற்றினர். உடனே இமான் அண்ணாச்சி, “வெளியே வந்து பார்க்க போறோம் வாடா.. என்னடா நீ!” என்று சொல்லி அவரைத்தேற்றி, அனைவரையும் சிறிது தண்ணீர் குடிக்கச் சொல்லி விட்டு வெளியேறினார்.
அப்போது பிக்பாஸ் இமான் அண்ணாச்சியை அழைத்து, “என்ன இமான் சொல்லாம போறீங்க?” என்று அழைக்க, உடனே நெகிழ்ந்து போய் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த இமான் அண்ணாச்சி, “என்னை இத்தனை நாட்கள் இந்த வீட்டில் வைத்துக்கொண்டு நன்றாக கவனித்தீர்கள் பிக்பாஸ்! நீங்கள் இந்த வீட்டின் பெரிய உறுப்பினர்.
உங்களிடம் சொல்லாமல் போனது தவறுதான் மன்னித்து விடுங்கள். உங்களை நேரில் பார்க்கவில்லை என்பதுதான் வருத்தம். உங்கள் குரலை கேட்டு நீங்கள் நிச்சயமாக காரம் மிகவும் பிடிக்கக் கூடிய ஆள் என்று நான் கூறி கொண்டிருந்தேன்!” என்று தெரிவித்துவிட்டு நன்றி சொல்லி விடை பெற்றுச் சென்றார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் கடைசியாக நடந்த அரசியல் கட்சிகள் டாஸ்க்கின் இறுதியில் கூட்டணி வைத்து வெற்றி பெற்று அந்தக் கட்சியின் சார்பாக வெற்றி பெற்ற தலைவராக இமான் அண்ணாச்சி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த நேரத்தில் அக்ஷாரா, “அண்ணாச்சி வாழ்க!” என்று குரல் கொடுத்ததும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் அண்ணாச்சியை தூக்கிக் கொண்டாடி, “பொதுவாக எம்மனசு தங்கம்” பாடலை பாடி நெகிழ்ச்சி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.