ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Also Read | BIGGBOSS: சிறைக்கு செல்லும் குயின்ஸி & ராபர்ட்.. இது தான் காரணமா? பரபரப்பான வீடியோ
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இதனிடையே, இந்த வாரத்துக்கான பிக்பாஸ் வீட்டு தலைவராக மைனா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கால்பந்து போட்டியின் மூலம் தலைவர் தேர்ந்தெடுப்பு நடைபெற்றது. இந்நிலையில், மைனா பிக்பாஸ் வீட்டின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இதனிடையே இந்த வாரம் சிறந்த பங்களிப்பு அளித்தவர்கள் மற்றும் குறைவான பங்களிப்பு அளித்தவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
அதன் அடிப்படையில், ராபர்ட் மற்றும் குயின்சி ஆகியோர் இந்த வாரம் சிறைக்கு செல்ல இருக்கிறார்கள். போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும்போது பேசும் பிக்பாஸ்,"ராபர்ட், குயின்சி சிறப்பாக பங்கெடுத்துக்கொள்ளவில்லை என தேர்வானதால் நீங்க ரெண்டு பேரும் சிறைக்கு போகணும்" என்கிறார்.
தொடர்ந்து வீட்டின் தலைவரான மைனாவிடம் பேசிய பிக்பாஸ்,"உடைகளும் சாவியும் வந்த பிறகு அவங்க ரெண்டு பேரையும் சிறையில வச்சு பூட்டுங்க" என்கிறார்.
Also Read | Vijay : விஜய், சிம்பு பங்குபெற்ற ‘வாரிசு’ அடுத்த சிங்கிள் Shoot.? நடன மாஸ்டர் இவரா..?