"GP முத்து அண்ணா சிங்கம் மாதிரி" - கமல் கொடுத்த TASK-ல் ஹவுஸ்மேட்ஸ் உருக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், நேற்று போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார் GP முத்து.

இதனிடையே நேற்று பிக்பாஸ் போட்டியில் கமல் தோன்றி போட்டியாளர்களிடம் உரையாடினார். அப்போது பிக்பாசில் இருந்து வெளியேறுவதாக கமலிடம் தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார் GP முத்து. இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், இன்று புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு கார்டை எடுக்க வேண்டும். அதனை தாங்கள் விரும்பும் சக போட்டியாளர்களுக்கு கொடுக்கலாம். அப்போது, மைனா நந்தினி ஒரு கார்டை எடுக்கிறார். அதில்,"சிங்கம் போல வீட்டை கட்டுப்படுத்துபவர்" என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை வாசித்த மைனா,"இதை நான் GP முத்து அண்ணனுக்கு தான் கொடுக்கணும்" என்கிறார். அப்போது சக போட்டியாளர்கள் அதனை ஆமோதித்து, உருக்கமாக வெகுநேரம் கைதட்டினர்.

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss 6 Tamil Myna Talk about GP Muthu to Kamal

People looking for online information on BiggBoss6 Tamil, Biggbosstamil, GP MUTHU, Myna will find this news story useful.