தன்னிடம் உள்ள சிலுக்கு சட்டைகள் எல்லாம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என GP முத்து கேமரா முன்னால் பேசியிருக்கிறார்.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
இந்த சீசனில் யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் ஜாலியாக வலம்வரும் GP முத்து, தன்னுடைய வெள்ளேந்தியான குணத்தால் சக போட்டியாளர்களிடம் ஈர்க்கப்பட்டுள்ளார் என்றே சொல்லவேண்டும். முன்னதாக வீட்டுக்குள் உள்ள கேமராவில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக தனது குடும்பத்தினரிடம் கூறியிருந்தார். இந்நிலையில், கண்ணாடி, நீள மீசை என ட்ரெண்ட் கெட்டப்பில் கேமரா முன்னால் நிற்கும் GP முத்து,"மாடல் நல்லா இருக்கா?, இதோட மாடலா டிரெஸ் எல்லாம் இருக்கு. நான் சிலுக்கு சட்டையெல்லாம் வச்சிருக்கேன். அது எல்லாம் எனக்கு வந்துடனும்" எனக் கூறுகிறார்.