தமிழில் பிக்பாஸ் 6 வது சீசன், தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சி மட்டுமில்லாமல், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்திலும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டு களிக்க முடியும்.
Also Read | Bigg boss 6 tamil : "சொன்னது தப்புதான்.. மன்னிச்சிடுங்க.. வெளிய அனுப்பிடாதீங்க.." - மன்றாடிய தனலட்சுமி.!
இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்பற்றும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது பற்றியும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஏராளமான கருத்துக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி வருகிறது. அது மட்டுமில்லாமல், சில போட்டியாளர்களுக்கு என்று பிரத்யேக ஆர்மி உருவாக்கி அவர்கள் குறித்த விஷயங்களை ரசிகர்கள் பலரும் வைரல் ஆக்கியும் வருகின்றனர்.
இதனிடையே, பிக்பாஸ் வீட்டில் தற்போது ராங்க் அடிப்படையில் போட்டியாளர்கள் நிற்க, அப்போது அசீம், ஆயிஷா உள்ளிட்டோர் மாறி மாறி பேசும் விஷயங்கள் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு எண்ணில் நின்று கொள்ள, அவர்களை பற்றி அசீம் பேசுவது போல ப்ரோமோ இடம்பெற்றுள்ளது.
அப்போது பேசும் அசீம், "தகுதி இல்லாத பல பேர் இங்கே நிற்கிறார்கள். 1 st-ஆ இருக்கட்டும். 6 th-ஆ இருக்கட்டும். 9 th (ஆயிஷா) எல்லாம் சுத்தமாக தகுதி இல்லாத ஆள்" என கூறுகிறார். தான் சுத்தமாக தகுதி இல்லாத ஆள் என தன்னை குறிப்பிட்டதும் நேரடியாக அசீமிடம் கேள்வி கேட்டார் ஆயிஷா.
"தகுதி இல்லை என எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?" என ஆயிஷா கேட்க, "நீ தூக்கத்தை தவிர வேற என்ன பண்ணி இருக்கே?" என அசீம் திருப்பி கேட்கிறார். நீங்க மட்டும் தூங்கலயா? என ஆயிஷா மறுபடியும் கேட்டதும், "தேவை இல்லாம கத்தி பேசுற வேலைய என்கிட்டே வெச்சுகாத ஆயிஷா" என அசீம் கூறியதும் மீண்டும் ஆயிஷா கத்திக் கொண்டிருக்க, "உனக்கு சவுண்டு இருக்குன்னா எனக்கும் தான்டி சவுண்டு இருக்கு. போடி" என அசீம் கடும் கோபம் அடைகிறார்.
வாடி, போடி என சொல்வதை பற்றி இன்னும் கோபத்துடன் ஆயிஷா கேட்பது போல இந்த ப்ரோமோ இடம்பெற்றுள்ளது. இதனால், பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து சண்டை நடந்து வருவது பற்றியும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read | 'PRINCE' படத்தில் தளபதி விஜய்யின் 'BEAST' பட ரெஃபரன்ஸ்! முழு விவரம்